என்னோட கனவே இதுமட்டும் தான். அதை சாதிக்காம விடவே மாட்டேன் – யுஸ்வேந்திர சாஹல் பேட்டி

Chahal
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகி இதுவரை 145 போட்டிகளில் பங்கேற்று 187 விக்கெட்டுகளை வீழ்த்தி அகத்தியுள்ளார். முதல் மூன்று ஆண்டுகளில் அவரது ஐபிஎல் செயல்பாடு மிகச் சிறப்பாக இருந்ததால் 2016-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

இதுவரை இந்திய அணிக்காக 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 121 விக்கெட்டுகளையும், 80 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 96 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

மிகச் சிறப்பான விக்கெட் டேக்கர் மற்றும் மேட்ச் வின்னரான அவர் எதிர்வரும் 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறாதது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்ப்படுத்தி உள்ளது. அதோடு இந்திய அணிக்கு சாஹல் அவசியம் என்றும் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் தனது கருத்தினை தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாத சாஹல் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட முடிவு செய்துள்ளார். எதிர்வரும் இந்த கவுண்டி கிரிக்கெட்டில் மிகச் சிறப்பாக செயல்படுவதை மட்டுமே தற்போது யோசித்து வருவதாகவும், இந்திய அணியில் நிரந்தர இடத்தைப் பிடிக்க என்னுடைய தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்வேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு கருத்தில் : இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்குமே நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த வகையில் நானும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

இதையும் படிங்க : நல்ல ஃபார்ம் முக்கியமல்ல, அவர பெஞ்சில் உட்கார வெச்சுட்டு கேஎல் ராகுலுக்கு சான்ஸ் கொடுங்க – முகமது கைஃப் அதிரடி கருத்து

இன்னும் என்னுடைய கனவு டெஸ்ட் கேப்பை கைப்பற்ற வேண்டும் என்பதே முதன்மையாக இருக்கிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. எனவே நான் ரஞ்சி தொடரில் என்னால் முடிந்த அளவு சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி அந்த கனவை நிறைவேற்ற முயற்சி செய்வேன். அதற்கான வாய்ப்பு விரைவில் என்னை தேடி வரும் என்று நினைப்பதாக யுஸ்வேந்திர சாஹல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement