நல்ல ஃபார்ம் முக்கியமல்ல, அவர பெஞ்சில் உட்கார வெச்சுட்டு கேஎல் ராகுலுக்கு சான்ஸ் கொடுங்க – முகமது கைஃப் அதிரடி கருத்து

KL Rahul Mohammed Kaif
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் 3 புள்ளிகளை பெற்ற இந்தியா அடுத்ததாக நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 10ஆம் தேதி பரம எதிரி பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது. முன்னதாக இத்தொடரில் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் முழுமையாக குணமடையாததால் லீக் சுற்றில் இளம் வீரர் இசான் கிசான் விளையாடும் வாய்ப்பு பெற்றார். இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்தது முதல் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் விளாசியது வரை பெரும்பாலும் துவக்க வீரராக அசத்திய அவரால் மிடில் ஆடரில் சாதிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றியதால் 66/4 என சரிந்த இந்தியாவை மிடில் ஆர்டரில் நங்கூரமாக விளையாடி பாண்டியாவுடன் இணைந்து 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் 266 ரன்கள் குவிப்பதற்கு முக்கிய பங்காற்றி ஓரளவு மானத்தை காப்பாற்றினார். ஆனால் மிடில் ஆர்டரிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்துள்ள அவருக்கு தற்போது கேஎல் ராகுல் குணமடைந்து வந்து விட்டதால் சூப்பர் 3 சுற்றிலும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

பெஞ்சில் அமரலாம்:
ஏனெனில் அவரை விட அனுபவமிக்க கிளாஸ் நிறைந்த வீரரான ராகுல் விளையாடுவது முக்கியம் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் ஏற்கனவே தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி சுமாரான ஃபார்மில் இருந்த அவர் காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடமல் நேரடியாக இத்தொடரில் களமிறங்க கூடாது என்ற எதிர்ப்புகள் காணப்படுகிறது.

குறிப்பாக உலக கோப்பையை வெல்வதற்கு பெரிய பெயரை பார்க்காமல் யார் நல்ல ஃபார்மில் இருக்கிறார் என்பதை பாருங்கள் என விமர்சித்த கௌதம் கம்பீர் நிச்சயமாக ராகுல் விளையாடக்கூடாது என்று தெரிவித்திருந்தார். அதே போல மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லாத குறையை தீர்க்க இஷான் கிசான் விளையாட வேண்டும் என்று அஸ்வின் கூறியிருந்தார். இந்நிலையில் ராகுல் போன்ற தரமான அனுபவமிக்க வீரர் விளையாடுவதற்காக நல்ல ஃபார்மில் இருந்தாலும் இசான் கிசான் பெஞ்சில் அமர்வதில் தவறில்லை என முகமது கைப் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய மிடில் ஆர்டரின் முதுகெலும்பாக இருக்கும் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் ஆகிய இருவரும் உலகக்கோப்பையில் விளையாடுவதை விரும்பும் டிராவிட்டுக்கு அவர்களுக்கு போதிய நேரத்தை கொடுக்க வேண்டும் என்பது தெரியும். இஷான் சிறப்பாக விளையாடி அணிக்குள் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்தியுள்ளார். இருப்பினும் அவரைப் போன்ற ஒரு நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர் பெஞ்சில் அமர்ந்தால் எந்த பிரச்சினையும் இல்லை”

இதையும் படிங்க: சப்ஸ்டியூட் பிளேயராக வந்து தெ.ஆ வெற்றியை பறித்த லபுஸ்ஷேன் தனித்துவ உலக சாதனை – 12 வருடத்துக்கு பின் ஆஸி வரலாற்று சாதனை

“ஏனெனில் ராகுல் டிராவிட் 5வது இடத்தில் ராகுல் விளையாடுவதை விரும்புகிறார். அவருடைய புள்ளிவிவரங்கள் அங்கே சிறப்பாக இருக்கிறது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக்கோப்பை போட்டிக்கு முன்பாக அந்த 2 வீரர்களும் போதிய போட்டிகளில் விளையாடி தயாராக இருப்பதற்கு வழி வகை செய்ய வேண்டும்” என்று கூறினார். இருப்பினும் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காததாலயே சமீப காலங்களில் இந்தியா முக்கிய போட்டிகளில் திண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement