- Advertisement -
இந்திய கிரிக்கெட்

என் வாழ்நாளில் தோனியை மறக்கமாட்டேன்..! சாஹல் நெகிழ்ச்சி..! – காரணம் இதுதான்..?

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய அணி ஜிம்பாவிற்கு எதிரான ஆட்டத்தின்போது இந்திய அணியில் விளையாடிய யுஸ்வென்ட்ரா சஹல் அதன் பின்னர் இந்திய அணியின் நம்பிக்கை கூறிய சூழல் பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். தான் முதலில் ஜிம்பாவிற்கு எதிரான போட்டியில் இந்திய அனியில் விளையாடிய போது தோனி தன்னை சவ்கர்யபடுத்தியதாக கூறியுள்ளார்.

சமீபத்தில் “பிரேக் பாஸ்ட் வித் சாம்பியன்” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற இந்த 27 வயது இளம் வீரர் தனது கிரிக்கெட் வாழ்வில் நடந்த பல்வேறு சுவாரசியமான சம்பவங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முதன் முதலில் கேப்டன் தோணியிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை பெற்ற போது தனக்கு மே சிலிர்த்து விடத்தக்க தெரிவித்தார்.

மேலும் இந்த பேட்டியில் தோனி பற்றி தெரிவிக்கையில் ” நான் ஒரு நாள் போட்டிக்கான தொப்பியை தோணியிடம் இருந்து தான் பெற்றுக் கொண்டேன். அவர் ஒரு மிக பெரிய வீரர் அவரை நான் முதலில் சந்தித்த போது எனக்கு வார்த்தைகளே வரவில்லை.ஆனால் அவர் என்னிடம் அவ்வளவு நன்றாக பேசினார். எனக்கே அது தோனி தானா என்று கூட தோன்றியது.

ஜிம்பாபே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது தான் நான் அவரை முதலில் சந்தித்தேன்.அவரை சந்தித்த பொது நான் அவரை மஹி சார் என்று தான் அழைத்தேன். ஆனால் இரண்டு ஓவர்கள் முடிந்தவுடன் அவர் என்னிடம் வந்து ‘என்னை மஹி,தோனி அல்லது பாய் ‘ என்று உன் இஷ்டம் போல அழைக்கலாம் என்று கூறினார்” என்று யுஸ்வென்ட்ரா சஹல் தெரிவித்துள்ளார்.

- Advertisement -