- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணியின் என்னுடைய பிளேயிங் லெவன் இதுதான் – யுஸ்வேந்திர சாஹல் தேர்வு

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இந்திய அணியின் பிளேயிங் லெவனை தேர்வு செய்து அறிவித்த : யுஸ்வேந்திர சாஹல்

அதே தன்னம்பிக்கையுடன் தற்போது நடப்பு சாம்பியனாக இந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாட இருக்கும் இந்திய அணியானது தற்போது மிக பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் நிச்சயம் இம்முறையும் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அதேபோன்று இந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை சில முன்னாள் வீரர்கள் கணித்து வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் இந்திய அணியின் அனுபவ சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் எதிர்வரும் 2026 டி20 உலகக்கோப்பை தொடருக்கான தனது பிளேயிங் லெவனை தொகுத்து வெளியிட்டுள்ளார். அதில் துவக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

மிடில் ஆர்டரில் திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். பின்வரிசையில் சிவம் துபே, ரிங்கு ஆகியோரையும் சுழற்பந்து வீச்சாளராக அக்சர் பட்டேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோரை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங் மற்றும் பும்ரா ஆகியோரை தேர்வு செய்துள்ளார். அந்த வகையில் சாஹல் தேர்வு செய்த இந்திய அணியின் இதோ :

- Advertisement -

இதையும் படிங்க : டெல்லி அணி நிர்வாகத்திடம் எவ்வளவோ கெஞ்சினேன்.. ஆனா அபிஷேக் சர்மாவை விட்டுட்டாங்க – ரிக்கி பாண்டிங்

1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ரிங்கு சிங், 8) அக்சர் படேல், 9) வருண் சக்கரவர்த்தி, 10) அர்ஷ்தீப் சிங், 11) ஜஸ்ப்ரீத் பும்ரா.

- Advertisement -