டெல்லி அணி நிர்வாகத்திடம் எவ்வளவோ கெஞ்சினேன்.. ஆனா அபிஷேக் சர்மாவை விட்டுட்டாங்க – ரிக்கி பாண்டிங்

Ponting and Abhishek
- Advertisement -

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசை பட்டியலில் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்ததோடு எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராகவும் களமிறங்க காத்திருக்கிறார். அவரது ஆட்டம் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பிரமாதமாக இருக்கும் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் கூறி வருகின்றனர்.

அபிஷேக் சர்மாவை விடாதீங்கன்னு கெஞ்சுனேன் : ரிக்கி பாண்டிங்

ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணிக்காக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் கிடைத்த வேளையில் தற்போது உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக மாறும் அளவிற்கு அவர் வளர்ந்திருக்கிறார். தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் பவர்பிளே ஓவர்களில் மிகச் சிறப்பான துவக்கத்தை அவர் இந்திய அணிக்கு வழங்கி வருகிறார்.

- Advertisement -

அதனால் இந்திய அணி தொடர்ச்சியான வெற்றிகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் அபிஷேக் சர்மாவின் ஆரம்ப காலகட்ட குறித்து சில முக்கியமான தகவல்களை முன்னாள் டெல்லி அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

நான் 17 வயதிலேயே அபிஷேக் சர்மாவை பார்த்தேன். என்னுடைய பயிற்சியின் கீழ் தான் அவர் ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமானார். அப்போதே அவரிடம் ஏதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதை உணர்ந்தேன். மேலும் நிச்சயம் அவர் ஒரு சூப்பர் ஸ்டாராக மாறுவார் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் ஒரு கட்டத்தில் டெல்லி அணி அபிஷேக் சர்மாவை டிரேடிங் செய்யும் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் பைனல்ல விளையாடப்போகும் 2 டீம் இதுதான்.. அதுல மாற்றம் இல்ல – சீக்கா கணிப்பு

அப்போது நான் டெல்லி அணியின் நிர்வாகத்திடம் பலமுறை கெஞ்சினேன். அவரை டிரேடிங் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டேன். ஆனால் இறுதியில் அவர்கள் சன்ரைசர்ஸ் அணிக்கு அபிஷேக் சர்மாவை விட்டுக் கொடுத்தார்கள். அந்த முடிவை நினைத்து இப்பவும் எனக்கு வருத்தமாக உள்ளது என்று ரிக்கி பாண்டிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement