டி20 வேர்ல்டுகப் பைனல்ல விளையாடப்போகும் 2 டீம் இதுதான்.. அதுல மாற்றம் இல்ல – சீக்கா கணிப்பு

Kris Srikkanth
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் 2026-ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு நடைபெற இருக்கும் இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதனால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த டி20 உலக கோப்பை தொடரில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நடப்பு சாம்பியனாக பங்கேற்கிறது.

இறுதிப்போட்டிக்கு செல்லும் 2 அணிகள் இதுதான் : சீக்கா ஸ்ரீகாந்த் கணிப்பு

அதன் காரணமாக நிச்சயம் இம்முறையும் இந்த தொடரில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. அந்த வகையிலேயே சூரியகுமார் யாதவின் தலைமையில் இளமையும், அனுபவமும் கலந்த 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் சிறப்பாக விளையாடும்? எந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு செல்லும்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கணிப்பினை வழங்கியுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதே சமயத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இறுதி போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய அணியை போன்ற ஆஸ்திரேலிய அணியும் பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது.

- Advertisement -

இதையும் படிங்க : சரிந்து கிடக்கும் அணியை தூக்கி நிறுத்த முன்னாள் ஜாம்பவானை அணிக்குள் கொண்டு வந்த – இலங்கை வாரியம்

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை மிட்சல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், கிரிஸ் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல் போன்ற வீரர்கள் இருக்கின்றனர். அவர்களின் யாராவது 2 பேர் சிறப்பாக விளையாடினால் கூட போதும். ஆனால் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் தான் பலவீனம் இருப்பதாக நினைக்கிறன். அதேபோன்று இந்தியா எவ்வித சந்தேகமும் இன்றி இறுதிப் போட்டிக்கு வரும் என்றும் தான் கருதுவதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement