சரிந்து கிடக்கும் அணியை தூக்கி நிறுத்த முன்னாள் ஜாம்பவானை அணிக்குள் கொண்டு வந்த – இலங்கை வாரியம்

Srilanka
- Advertisement -

ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்து வந்த இலங்கை அணியானது முன்னணி அணிகளுக்கு எதிராக மிகப்பெரிய சவாலான அணியாக இருந்து வந்தது. ஆனால் அந்த அணிகளில் இருந்து ஜாம்பவான்கள் வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு தற்போது இலங்கை அணி மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. அவர்களது இந்த நிலை இலங்கை அணியின் ரசிகர்களையும் வருத்தமடைய செய்துள்ளது.

இலங்கை அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் :

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி-யின் 2026 ஆம் ஆண்டிற்கான பத்தாவது டி20 உலக கோப்பை தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வேளையில் இலங்கை அணி இந்த தொடரில் எவ்வாறு விளையாடப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இந்த தொடருக்கான தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டு விட்டது. ஆனால் தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் அவர்களது ஆட்டம் தடுமாற்றமாக இருந்து வருகிறது. உலககோப்பைக்கு முன்னர் அந்த அணி இப்படி தடுமாறுவது மேலும் அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தற்போது பெரிய சரிவை சந்தித்துள்ள இலங்கை அணிக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக இலங்கை கிரிக்கெட் வாரியம் ஒரு புதிய முடிவை கையில் எடுத்துள்ளது. அந்த வகையில் எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியின் ஆலோசகராக முன்னாள் ஜாம்பவான் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தினை ஈர்த்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இப்போ இருக்குறது டம்மி டீம்.. அவங்க கூட விளையாடாம போனா சந்தோசம் தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் ஓபன்டாக்

அந்த வகையில் இலங்கை அணியில் பல ஆண்டு காலம் விளையாடிய அனுபவம் வாய்ந்த வீரரான லாசித் மலிங்காவை டி20 உலக கோப்பை தொடருக்கான ஆலோசகராக அறிவித்துள்ளது. அவரது ஆலோசனையின் கீழ் இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வாறு செயல்படப்போகிறார்கள் என்பது குறித்த எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement