வயசு 16 ஆகியும் ஆர்சிபி மட்டும் ஏன் கப் ஜெயிக்கல? அனைவரின் புரியாத புதிருக்கு – சஹால் கொடுத்த பதில் என்ன

Yuzvendra Chahal RCB
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான ஐபிஎல் கடந்த 2008ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இன்று 16 வருடங்கள் கழித்து பல பரிணாமங்களை கடந்து ஐசிசி நடத்தும் உலகக் கோப்பைக்கு நிகரான தரத்தையும் கோடிக்கணக்கில் வருமானத்தையும் கொடுத்து விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது எனலாம். மேலும் இத்தொடரில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக ஜொலிக்கும் நிலையில் நேற்று வந்த குஜராத் கூட முதல் சீசனிலேயே சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது.

RR vs RCB 2

- Advertisement -

ஆனால் 2008இல் துவங்கப்பட்டது முதல் இப்போது வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு கோப்பையை கூட வெல்லாமலேயே இருப்பது ஆச்சரியமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். இத்தனைக்கும் லீக் சுற்றில் மிரட்டலாக செயல்பட்டு வரலாறு காணாத வெற்றிகளையும் சாதனைகளையும் குவிக்கும் அந்த அணி அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோரது தலைமையில் 2009, 2011 வருடங்களில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்தது. அதை விட விராட் கோலி தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற எத்தனையோ தரமான நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் முக்கியமான நேரங்களில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் அந்த அணி வெற்றியையும் கோப்பையும் எதிரணிக்கு தாரை வார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

சஹாலின் பதில்:
அதனால் விராட் கோலி இருக்கும் வரை கோப்பையை தொட முடியாது என்று எழுந்த கிண்டல்கள் மற்றும் விமர்சனங்களால் பதவி விலகிய அவருக்குப்பின் டு பிளேஸிஸ் தலைமையில் கடந்த 2 சீசனங்களில் விளையாடியும் பெங்களூரு எந்த முன்னேற்றத்தையும் சந்திக்கவில்லை. அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் பெங்களூரு கோப்பையை வெல்லாது என்ற கிண்டல்கள் உச்சகட்டமாக இருந்து வருகின்றன.

Virat Kohli Shane watson RCB

பொதுவாக ஏலத்தில் ஒரு சில நட்சத்திர வீரர்களை வாங்குவதற்காக மொத்தமாக பெரிய தொகையை செலவழிப்பது ஒரு சில தோல்விகளை சந்தித்தால் அதற்காக அதிரடியான மாற்றத்தை செய்கிறோம் என்ற பெயரில் பதற்றமடைந்து வீரர்களை கழற்றி விடுவதும் அந்த அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் விராட் கோலி போன்ற ஒரு சிலருக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும் நிலையான 11 பேர் அணியை தேர்வு செய்யாததும் அந்த அணியின் வெற்றிக்கு குறுக்கே நிற்கிறது என்றே சொல்லலாம்.

- Advertisement -

அப்படிப்பட்ட நிலையில் 140 போட்டிகள் விளையாடி நிறைய வெற்றிகளில் பங்காற்றியும் எவ்விதமான முன்னறிவிப்பின்றி தம்மை கழற்றி விட்டதாக 2013 – 2021 வரை பெங்களூருவின் முதன்மை ஸ்பின்னராக விளையாடிய யுஸ்வென்ற சஹால் சமீபத்தில் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் 16 வருடங்களாகியும் பெங்களூரு ஏன் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்ற காரணத்தை தாமும் தேடி வருவதாக கூறியுள்ள அவர் 2016 சீசனில் மகத்தான அணி செட்டிலாகியும் ஃபைனலில் பெங்களூரு தோல்வியை சந்தித்தது தற்போதும் தமக்கு வலியை கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

Yuzvendra-Chahal

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த கேள்விக்கான விடையை நானும் 8 வருடங்களாக தேடி வருகிறேன். 2016இல் கெயில், ராகுல் ஆகியோர் இருந்ததால் நல்ல வாய்ப்பு கிடைத்தும் நாங்கள் ஃபைனலில் தோற்றோம். அந்த சீசனில் டெல்லிக்கு எதிரான குவாலிபயர் போட்டியில் ஊதா தொப்பியை வென்ற நான் 2 நாட்கள் மட்டுமே வைத்திருந்தேன்”

- Advertisement -

“மேலும் ஒரு முக்கிய போட்டியில் தோற்றால் வெளியே செல்வோம் இல்லையேல் 2வது இடத்தை பிடிப்போம் என்ற சூழ்நிலையில் வென்ற நாங்கள் ஃபைனல் சென்றோம். இருப்பினும் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் 8 – 10 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இன்னும் வலிக்கிறது. அதனால் ஒவ்வொரு முறையும் அடுத்த வருடம் என்ன செய்யலாம் என்பதை பற்றி பேசுவோம். ஏனெனில் சிறப்பாக விளையாடியும் நீங்கள் தோற்றால் அதிகமாக வலிக்கும்”

Chahal 1

இதையும் படிங்க:வெளிநாட்டில் சொதப்பும் சுப்மன் கில்லை ட்ராப் செய்யுமாறு கோபத்துடன் வெங்கடேஷ் ப்ரசாத் பதிவிட்டாரா? உண்மை என்ன

“பொதுவாக முயற்சித்து தோற்பது ஆரம்பம் முதல் தோற்பது என 2 வகைகள் உள்ளன. அப்படி ஒருமுறை நாங்கள் தொடர்ந்து 6 போட்டிகளில் தோற்று 7வது போட்டியில் வென்ற போது கோப்பையை வென்றதற்கு நிகராக கொண்டாடினோம். இந்த வருடம் ராஜஸ்தான் அணியில் நாங்கள் சிறப்பாக விளையாடியும் எங்களால் தகுதி பெற முடியவில்லை. எனவே எங்களுடைய கைகளில் இல்லாதது பற்றி அதிகமாக சிந்திக்க கூடாது” என்று கூறினார்.

Advertisement