வெளிநாட்டில் சொதப்பும் சுப்மன் கில்லை ட்ராப் செய்யுமாறு கோபத்துடன் வெங்கடேஷ் ப்ரசாத் பதிவிட்டாரா? உண்மை என்ன

Venkatesh Prasad
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அந்த வெற்றிக்கு அறிமுக போட்டியிலேயே அபாரமாக செயல்பட்டு சதமடித்து ஏராளமான சாதனைகள் படைத்த யசஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் 12 விக்கெட் வீழ்த்திய ரவிச்சந்திரன் அஸ்வின் தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார். இருப்பினும் அந்த போட்டியில் விராட் கோலி தடுமாறியதை போலவே இளம் வீரர் சுப்மன் கில் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

கடந்த 2018 அண்டர்-19 உலக கோப்பையை வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று முக்கிய பங்காற்றிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் பதிவு செய்த மறக்க முடியாத காபா வெற்றியில் 91 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய அவர் 2022 ஐபிஎல் தொடரில் முதல் சீசனிலேயே குஜராத் கோப்பையை வெல்லும் அளவுக்கு அதிக ரன்கள் குவித்து வெள்ளை பந்து கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

ட்ராப் பண்ணுங்க:
அந்த வாய்ப்பில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருது வென்று அசத்திய அவர் கடந்த டிசம்பரில் வங்கதேச மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதமடித்து கடந்த பிப்ரவரியில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமும் டி20 தொடரில் சதமும் அடித்தார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 2023 பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் சதமடித்த அவர் ஒரே காலண்டர் வருடத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் சதமடித்த முதல் இந்திய தொடக்க வீரர் என்ற வரலாறு படைத்தார்.

அதன் காரணமாக சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் அவர் நிலையான இடத்தை பிடித்துள்ளார் என்றே சொல்லலாம். இருப்பினும் நிதர்சனத்தை பார்க்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் தடுமாறும் அவர் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 18, 13 என சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அதை விட சவாலான ஆசியாவுக்கு வெளியே கடந்த 7 டெஸ்ட் போட்டிகளில் அவர் 6, 18, 13, 4, 17, 8, 28 என ஒரு அரை சதம் கூட அடிக்காமல் சுமாராகவே செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

அதை பார்த்த முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் வெளிநாடுகளில் அவர் விளையாடக் கூடாது என்று ட்விட்டரில் விமர்சித்தார். இது பற்றி அவர் ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு. “சுப்மன் கில் திறமை மீது எனக்கு நிறைய மரியாதை இருக்கிறது. ஆனால் அவருடைய செயல்பாடுகள் சராசரிக்கும் குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில் 30 இன்னிங்ஸ்களுக்கு பின் 30க்கும் குறைவான சராசரியை அவர் கொண்டுள்ளார். இதே சூழ்நிலையில் மற்ற யாருக்கும் இவ்வளவு வாய்ப்புகள் கிடைத்ததாக எனக்கு தெரியவில்லை”

“மறுபுறம் இந்த இடத்தில் விளையாடுவதற்கு நிறைய வீரர்கள் காத்திருக்கின்றனர். குறிப்பாக பிரித்வி ஷா நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் சர்பராஸ் கான் முதல் தர கிரிக்கெட்டில் ஏராளமான ரன்கள் அடித்து காத்திருக்கிறார். இருப்பினும் சிலருக்கு இங்கே வெற்றிகரமாக செயல்படும் வரை தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் கில் நல்ல செயல்பாடுகளுக்கு பதிலாக பரிந்துரையால் தேர்வு செய்யப்படுகிறார். அவர் தொடர்ச்சியாக தொடர்ச்சியாக செயல்படவில்லை. ஆனாலும் அவருக்கு எதிராக முன்னாள் வீரர்கள் பேசுவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க:RCB : போதுங்க..போதும்.. இதுக்கு மேல வெயிட் பண்ணமுடியாது. ஆர்.சி.பி அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட – 2 பயிற்சியளர்கள்

அதை பார்த்த நிறைய ரசிகர்கள் உண்மையாகவே வெங்கடேஷ் பிரசாத் தான் இப்படி பதிவிட்டுள்ளார் என்று தங்களுடைய கருத்தை பதிலளித்து வருகின்றனர். ஆனால் ட்விட்டரில் நீலநிற டிக் வைத்திருக்க மாதாந்திர பணம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் அதை வெங்கடேஷ் பிரசாத் செய்யாத காரணத்தால் அவரைப் போலவே ஒரு போலியான கணக்கை உருவாக்கி ஏதோ ஒரு ரசிகர் தான் இவ்வாறு பதிவிட்டுள்ளது அந்த கணக்கின் உள்ளே சென்று பார்த்தால் தெரிவது குறிப்பிடத்தக்கது.

Advertisement