அனில் கும்ப்ளேவுக்கு பின் இவர்தான் இந்திய அணியின் சிறந்த லெக் ஸ்பின்னராக திகழ்கிறார் – சஞ்சய் பாங்கர் பாராட்டு

- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. ஜூன் 9 – 19 வரை டெல்லி, கட்டாக், விசாகப்பட்டினம், ராஜ்கோட், பெங்களூரு ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற தென் ஆப்பிரிக்கா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று இந்தியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இருப்பினும் அந்த சவாலை அற்புதமாக சமாளித்த இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் வென்று தொடரை சமன் செய்து தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

IND vs RSA Rishabh Pant Keshav Maharaj

- Advertisement -

ஆனால் பெங்களூருவில் நடந்த இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 5-வது போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்து அளிக்கப்பட்டது. முன்னதாக இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியாவின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு படு மோசமான பந்துவீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய சஹால் மற்றும் அக்சர் படேல் ஆகிய சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுக்களை எடுக்காமல் ரன்களை வாரி வாரி வழங்கினார்.

மீண்டெழுந்த சஹால்:
குறிப்பாக சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானுக்காக 27 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்ற நம்பிக்கை நட்சத்திரம் யுஸ்வென்ற சஹால் முழுமையாக 4 ஓவர்களை கொடுக்க முடியாத அளவுக்கு ரன்களை வாரி இறைத்தார். அதனால் கடும் விமர்சனங்களை சந்தித்த அவர் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்த இந்திய அணி நிர்வாகம் கொடுத்த வாய்ப்பில் விசாகப்பட்டினத்தில் நடந்த 3-வது போட்டியில் கொதித்தெழுந்த அவர் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் முதல் வெற்றிக்கு பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அதேபோல் ராஜ்கோட்டில் நடந்த 4-வது போட்டியிலும் 4 ஓவரில் 21 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்த அவர் அற்புதமாக செயல்பட்டு இந்த தொடரில் இந்தியாவின் எழுச்சிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார்.

IND vs RSA Chahal Axar Patel

2019 வாக்கில் இந்திய வெள்ளைப் அந்த அணியின் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த அவர் 2020, 2021 ஆகிய வருடங்களில் சுமாராக பந்து வீசியதால் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டதுடன் துபாயில் நடத்த 2021 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. ஆனால் மனம் தளராமல் ஐபிஎல் தொடரில் அபாரமாக செயல்பட்டு ஊதா தொப்பியை வென்று தற்போதைய தென் ஆப்ரிக்க தொடரில் அசத்தியுள்ள அவர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தனது இடத்தை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார்.

- Advertisement -

கும்ப்ளேவை போல்:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் அனில் கும்ப்ளேவுக்குப்பின் யுஸ்வென்ற சஹால் தான் சிறந்த லெக் ஸ்பின்னராக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பாராட்டியுள்ளார். கடந்த வருடம் சஹால் இல்லாததாது டி20 உலக கோப்பையில் இந்தியா தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்ததாக தெரிவிக்கும் அவர் இம்முறை ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்தியாவின் துருப்புச் சீட்டாக வெற்றிக்கு பங்காற்றுவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

Bangar

“கடந்த உலக கோப்பையில் சஹாலை தவறவிட்டு விட்டோம். இருப்பினும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் வெற்றிக்கு துருப்பு சீட்டாக செயல்படும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இந்தியாவுக்காக நீண்ட காலங்கள் சிறப்பாக பந்து வீசிய லெக் ஸ்பின்னர் என்றால் அது அனில் கும்ப்ளே ஆவார். அனில் கும்ப்ளேவுக்கு அடுத்து விரல் சுழல் பந்துவீச்சாளர் இந்தியாவுக்காக தொடர்ச்சியாக நீண்ட நாட்களாக விளையாடுகிறார் என்றால் அது நிச்சயம் யுஸ்வென்ற சஹால் ஆவார்” என்று கூறினார்.

- Advertisement -

தைரியமான சஹால்:
இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் சிறிய மைதானங்களில் பேட்ஸ்மேன்கள் தன்னை அடித்தாலும் அதற்காக அஞ்சாமல் தைரியமாக பந்து வீசி மீண்டெழுந்ததே பெங்களூரு அணிக்காக கடந்த வருடங்களில் விளையாடிய சஹாலின் பலம் என்று தெரிவிக்கும் பெங்களூரு அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் இது பற்றி மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க : கேப்டனாக ரிஷப் பண்ட் என்ன செய்வார்? தவறு அவர்களோடையது – சுட்டிக்காட்டி வெளுக்கும் முன்னாள் வீரர்

“சிறிய மைதானங்கள் உங்களின் திறமையை சோதிக்கும். அதில் நீங்கள் அடி வாங்கினால் அதற்காக பயப்படாமல் தைரியமாக இருந்தால் எப்படி அங்கு சிறப்பாக பந்து வீசலாம் என்று கற்றுக் கொள்ள முடியும். அவர் பந்தின் சீம் பகுதியை வித்தியாச வித்தியாசமான லைன்களில் பயன்படுத்தி பந்து வீசியதே அவரின் பலமாகும். இடது கை வலது கை என 2 வகையான பேட்ஸ்மேன்களுக்கும் ஒய்ட் போல பந்துவீசும் யுக்தியை அவர் கொண்டு வந்துள்ளார். அது அவர் சின்னசாமி மைதானத்தில் பந்து வீசியதில் இருந்தே இதை கற்றுக் கொண்டார்” என்று கூறினார்.

Advertisement