கேப்டனாக ரிஷப் பண்ட் என்ன செய்வார்? தவறு அவர்களோடையது – சுட்டிக்காட்டி வெளுக்கும் முன்னாள் வீரர்

RIshabh Pant Poor Batting
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பெற்ற தென்னாப்பிரிக்கா ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்று சவாலை கொடுத்தது. அதற்காக அஞ்சாத இந்தியா அதற்கடுத்த 2 போட்டிகளில் கொதித்தெழுந்து அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று தென் ஆப்பிரிக்காவை பதிலடி கொடுத்தது. ஆனால் பெங்களூருவில் நடைபெற்ற இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் இரு அணிகளும் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டு கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது.

Keshav-Maharaj-and-Rishabh-Pant

- Advertisement -

இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வெடுத்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் காயமடைந்ததால் திடீர் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரிஷப் பண்ட் மொத்தமாக சொதப்பினார். ஒரு கேப்டனாக எந்த பவுலரை எந்த சமயத்தில் உபயோகப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தவித்த அவர் சஹால் போன்ற பவுலர்கள் ஒருசில ஓவர்கள் ரன்களை கொடுத்ததால் அவர்களின் திறமை மீது நம்பிக்கை இழந்து முழு 4 ஓவர்களை கொடுக்கவில்லை.

தடுமாறிய பண்ட்:
அதைவிட கேப்டனாக முன்னின்று ரன்கள் குவிக்க வேண்டிய ஒரு பேட்ஸ்மேனாக பெரிய ரன்களை எடுக்க தவறிய அவர் ஏறக்குறைய 4 போட்டிகளிலும் எதிரணி விரித்த அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் என்ற வலையில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்தார். அதனால் பேட்டிங்கில் கொஞ்சம் கூட முன்னேறவில்லை என்று சுனில் கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் அவரை கடுமையாக விமர்சித்தனர். இத்தனைக்கும் டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடித்துள்ள இவர் இந்தத் தொடரில் வெறும் 52 ரன்களையும் ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 48 போட்டிகளில் 741 ரன்களை 23.1 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்துள்ளார்.

Pant

அதனால் டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற பேச்சுக்களுக்கு உள்ளாகியுள்ள இவருக்கு வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இதே இந்திய அணியில் இஷான் கிசான், கேஎல் ராகுல் போன்ற இளம் விக்கெட் கீப்பர்களுடன் தினேஷ் கார்த்தி போன்றவரும் சிறப்பாக பேட்டிங் செய்து தங்களுக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்கள்.

- Advertisement -

தவறு உங்களுடையது:
இந்நிலையில் இளம் வயதில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத அவரிடம் அழுத்தமான இந்திய கேப்டன்ஷிப் பொறுப்பை தேர்வு குழுவினர் கொடுத்தது தான் அவரின் சொதப்பல்களுக்கு காரணம் என்று முன்னாள் இந்திய ஜாம்பவான் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் மதன் லால் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக இன்னும் முதிர்ச்சியடையாத அவரிடம் அந்த பொறுப்பை வழங்கியது தேர்வு குழுவினரின் தவறுதான் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“நானாக இருந்தால் அவர் கேப்டனாக வருவதை தடுத்து நிறுத்தி அனுமதித்திருக்க மாட்டேன். ஏனெனில் அவரைப் போன்ற வீரருக்கு பிற்காலத்தில்தான் அதுபோன்ற பொறுப்பை வழங்க வேண்டும். இந்தியாவின் கேப்டனாக வருவது மிகப் பெரிய சவாலாகும். அவர் ஒரு இளம் வீரர். அவர் நம்மை விட்டு எங்கும் செல்ல மாட்டார். எந்த அளவுக்கு அவர் நீண்ட நாட்கள் விளையாடுகிறாரோ அந்தளவுக்கு அவர் முதிர்ச்சியடைவார்” என்று கூறினார்.

- Advertisement -

அதாவது இந்தியா போன்ற அணியை வழிநடத்துவது மிகப்பெரிய சவாலான காரியம் என்று தெரிவிக்கும் மதன் லால் அந்த அழுத்தமான வேலையை அனுபவமில்லாத இளம் வயதிலேயே அவரிடம் தேர்வுக் குழுவினர் ஒப்படைத்தது தான் தவறேயன்றி அதில் சுமாராக செயல்பட்ட ரிஷப் பண்ட் மீது எந்த தவறுமில்லை எனக்கூறி ஆதரவு தெரிவித்துள்ளார். ஏனெனில் கேப்டன்ஷிப் பொறுப்பில் ஓரளவாவது முதிர்ச்சி அடைந்தால் தான் எம்எஸ் தோனி, விராட் கோலி போன்றவர்களைப் போல் அவரால் நீண்ட நாட்கள் கேப்டனாக செயல்படும் அளவுக்கு பக்குவம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : என்னது விராட் கோலிக்கும் பாசிட்டிவ்வா? பி.சி.சி.ஐ ரோஹித்தை திட்ட இதுதான் காரணமா? – வெளியான ரிப்போர்ட்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “வரும் வருடங்களில் சிறப்பாக விளையாடினால் அதனால் கிடைக்கும் முதிர்ச்சியால் அவர் (பண்ட்) சிறந்த கேப்டனாக வரக்கூடும். ஒவ்வொரு வீரருக்கும் வெவ்வேறு இயற்கையான குணங்கள் இருக்கும். பொதுவாக கூலாக இருக்கும் குணமே எம்எஸ் தோனியை கேப்டன் பதவியில் பொருத்த வைத்தது. விராட் கோலி மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்ததால் பொருந்தினார். மேலும் பேட்டை ரிஷப் பண்ட் சுழற்ற வேண்டாம் என்று நான் கூறவில்லை. இருப்பினும் அவர் சற்று பொறுப்புடன் முதிர்ச்சியுடன் பேட்டிங் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement