என்னது விராட் கோலிக்கும் பாசிட்டிவ்வா? பி.சி.சி.ஐ ரோஹித்தை திட்ட இதுதான் காரணமா? – வெளியான ரிப்போர்ட்

Kohli
Advertisement

இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடருக்கு அடுத்து இந்திய அணியின் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராத் கோலி ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டு ஓய்வளிக்கப்பட்டார். இந்த ஓய்வு நாட்களில் மனதளவில் உற்சாகம் அடைவதற்காக அவர் சுற்றுலாவாக மாலத்தீவுகள் சென்றிருந்தார். அங்கு அவருடன் மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் மகள் வாமிகா ஆகியோர் உடன் சென்றனர்.

VIrat Kohli Knock Out

அவர் மாலத்தீவில் விடுமுறையை கழித்த சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிய நிலையில் தற்போது அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து பறந்துள்ளார். இந்த முறை இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் பயோ பபுள் விதிமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பதனால் தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் சுதந்திரமாக வெளியில் சென்று வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னதாக அஸ்வினுக்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததால் அவர் தனிமை படுத்தப்பட்டுள்ளார். அதன் காரணமாக தற்போது இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்கள் யாரும் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்றும் எந்தவித பாதுகாப்பும் இன்றி சுற்றக் கூடாது என பிசிசிஐ இந்திய வீரர்களை எச்சரித்திருந்தது.

rohith

இந்நிலையில் அதனைத் தொடர்ந்து விராட் கோலிக்கும் கொரோனா உறுதியானதாக ஒரு தகவல் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. ஆனால் இதில் முற்றிலும் உண்மை இல்லை என்றாலும் ஓரளவு உண்மை உள்ளது. அந்த தகவலை தான் நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி விராட் கோலிக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனது உண்மைதான். ஆனால் அது அவர் மாலத்தீவில் இருந்து இந்தியா திரும்பும் போது தான் தெரிய வந்தது.

- Advertisement -

அதன் பிறகு உரிய சிகிச்சை பெற்ற விராட் கோலி தற்போது மீண்டும் நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகுதான் இங்கிலாந்து சென்று உள்ளார். எனவே விராத் கோலிக்கு கொரோனா உறுதியானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது. தற்போது அவர் பூரண நலத்துடன் இருப்பதால் எந்தவித சிக்கலுமின்றி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவார்.

இதையும் படிங்க : ஸ்கூல் பவுலர்களை போல் அவங்கள வெளுத்தாங்க, சச்சின் – கங்குலியின் அந்த மாஸ் இன்னிங்சை நினைவு கூறும் ஜாம்பவான்

ஆனால் தற்போது விராட் கோலிக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக ஒரு பொய்யான தகவல் ஒன்று வதந்தியாக இணையத்தில் வைரலாகி வரும் வேளையில் அவர் கட்டாயம் இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவார் என்பதே இதில் இருக்கும் உண்மை. இருப்பினும் அணியில் திடீரென கொரோனா எந்த வழியிலும் பரவிட கூடாது என்பதற்காக கேப்டன் ரோஹித்தை பி.சி.சி.ஐ எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement