ஸ்கூல் பவுலர்களை போல் அவங்கள வெளுத்தாங்க, சச்சின் – கங்குலியின் அந்த மாஸ் இன்னிங்சை நினைவு கூறும் ஜாம்பவான்

Sachin Tendulkar Sourav Ganguly vs ENG
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஜூலை 1-ஆம் தேதி துவங்கும் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக ரோகித் சர்மா தலைமையிலான விராட் கோலி, பும்ரா, புஜாரா உள்ளிட்ட முதன்மை இந்திய அணியினர் போட்டி நடைபெறும் பர்மிங்காம் நகரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வருடம் ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணை கவ்வ வைத்த விராட் கோலி தலைமையிலான இந்தியா 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அந்த தொடரின் கடைசிப் போட்டி தற்போது நடைபெறும் நிலையில் புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்தை புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா எதிர்கொண்டு வெற்றிக்காக போராட உள்ளது.

பொதுவாக இங்கிலாந்து என்றாலே அங்கு அதிகப்படியான ஸ்விங் மற்றும் வேகம் இருக்கும் என்பதால் அவர்களது பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்வதற்கு இந்தியா போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் எப்போதுமே தடுமாறுவார்கள். அந்த அளவுக்கு கடினமான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற ஒருசில இந்திய ஜாம்பவான்கள் மட்டுமே அடக்கும் வகையில் அற்புதமாக பேட்டிங் செய்தவர்களாக திகழ்கின்றனர்.

- Advertisement -

மாஸ் சச்சின் – கங்குலி:
அப்படி இங்கிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் விளையாடிய மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று வரலாற்றை புரட்டினால் உடனே அனைவருக்கும் 2002இல் லீட்ஸ் நகரில் நடந்த போட்டி நிச்சயமாக முதலில் நினைவுக்கு வரும். ஆம் அப்போது கங்குலி தலைமையில் இங்கிலாந்தை 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் எதிர்கொண்ட இந்தியா முதல் 2 போட்டிகளின் முடிவில் 1 – 0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்தது. அதன்பின் லீட்ஸ் நகரில் நடைபெற்ற 3-வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து இங்கிலாந்து பவுலர்களை கதறகதற அடித்து முதல் இன்னிங்சில் 628/8 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

அதில் வீரேந்திர சேவாக் 8 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரர் சஞ்சய் பங்கர் தற்போதைய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் இணைந்து 170 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து 68 ரன்கள் எடுத்திருப்பார். அதை தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திரம் சச்சினுடன் கைகோர்த்த டிராவிட் 3-வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சதமடித்து 148 ரன்கள் எடுத்திருந்தபோது ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்திருப்பார்.

- Advertisement -

அதனால் நிம்மதி பெருமூச்சு விட முடியாத வகையில் அடுத்து களமிறங்கிய கேப்டன் கங்குலி தனது பங்கிற்கு இங்கிலாந்து பவுலர்களை 14 பவுண்டரி 3 சிக்சருடன் 128 ரன்கள் வெளுத்து வாங்கி சச்சினுடன் 249 ரன்கள் முரட்டுத்தனமான பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டமிழந்தார். அதிலும் அவர் அடித்த ஒரு சிக்சர் மைதானத்தில் இருந்த வயதான இங்கிலாந்து ரசிகரின் மண்டையை ரத்தம் வரும் அளவுக்கு பதம் பார்த்ததை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. அதேபோல் அவருடன் ஜோடி சேர்ந்து இங்கிலாந்தை பந்தாடிய சச்சின் 19 பவுண்டரி 3 சிக்சருடன் 193 ரன்கள் விளாசி இரட்டை சதமடிக்கும் பொன்னான வாய்ப்பை நழுவவிட்டு ஆட்டமிழந்தார்.

ஸ்கூல் பசங்க:
அந்த அளவுக்கு பந்துவீச்சில் இந்தியாவிடம் முரட்டுத்தனமான அடிவாங்கி இங்கிலாந்து பேட்டிங்கில் முதல் இன்னிங்சில் 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பாலோ ஆன் பெற்று பின்னர் 2-வது இன்னிங்சிலும் 309 ரன்களுக்கு சுருண்டது. அதனால் இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா இங்கிலாந்து மண்ணில் காலத்திற்கும் நின்று பேசும் அளவுக்கு அபார வெற்றியைப் பதிவு செய்து 1 – 1 என தொடரை சமன் செய்தது. இந்திய டெஸ்ட் அணியின் தூண்களாக கருதப்பட்ட சௌரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய மும்மூர்த்தி போன்ற பேட்ஸ்மேன்களும் சேர்ந்தார் போல் சதம் அடித்தது அந்த ஒரே ஒரு போட்டியாகும்.

- Advertisement -

அதனால் அந்தப் போட்டியை இப்போதும் கூட பெரும்பாலான ரசிகர்கள் மறக்காமல் வைத்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்து தொடரை முன்னிட்டு இந்திய டெஸ்ட் அணியை வடிவமைத்தவர்கள் என்ற பெயரில் சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அந்த குறிப்பிட்ட போட்டியை பற்றி இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் நினைவு கூர்ந்துள்ளார். அதிலும் அன்றைய நாளில் இங்கிலாந்து பவுலர்களை ஸ்கூல் பவுலர்களை போல் பார்ட்னர்ஷிப் போடுவதில் உலக சாதனை படைத்துள்ள சச்சினும் – கங்குலியும் இணைந்து பந்தாடியதாக கூறியுள்ள அவர் இது பற்றி பின்வருமாறு.

இதையும் படிங்க : இலங்கைக்கு எதிராக தனியொருவானாக போராடிய வார்னர் – 20 வருடங்களுக்கு பின் பரிதாப சாதனை, என்ன நடந்தது?

“இந்திய பேட்டிங்கின் இரட்டையர்களாக கருதப்படும் சச்சின் மற்றும் கங்குலி ஆகியோர் இணைந்து அன்றைய நாளில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை ஸ்கூல் பசங்களை போல் பந்தாடியதை பார்த்தது வேடிக்கையாக இருந்தது. குறிப்பாக சதங்களை கடந்து டிக்ளேர் செய்வதைப் பற்றி யோசித்தபோது சச்சினும் கங்குலியும் அந்த டெஸ்ட் போட்டியில் ஒருநாள் கிரிக்கெட்டை போல அதிரடியாக பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்”என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

Advertisement