இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. அதில் முதலில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 – 1 என்ற கணக்கில் இலங்கையை சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்து வென்ற ஆஸ்திரேலியா தன்னை டி20 உலக சாம்பியன் என்று நிரூபித்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியது. இருப்பினும் அதற்கடுத்த 2 ஒருநாள் போட்டிகளில் வென்ற இலங்கை 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.
அந்த நிலைமையில் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 4-வது போட்டி ஜூன் 21இல் கொழும்புவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. டிக்வெல்லா 1 (3) நிஷாங்கா 13 (25) குஷால் மெண்டிஸ் 15 (21) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் 34/3 என சரிந்த அந்த அணியை டீ சில்வா – அசலங்கா ஆகியோர் 4வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மீட்டெடுத்தார்கள்.
சரிந்த ஆஸ்திரேலியா:
அதில் டீ சில்வா 60 (61) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த கேப்டன் சனாகா 4 (8) வெலலெக் 19 (35) கருணாரத்னே 7 (9) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர். இருப்பினும் மறுபுறம் அற்புதமாக பேட்டிங் செய்த அஸலாங்கா 10 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 110 (106) ரன்கள் குவித்து ஆட்டமிழக்க கடைசியில் ஹஸரங்கா 21* (20) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தார்.
ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கமின்ஸ், மார்ஷ், குனேமான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 259 என்ற நல்ல இலக்கை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் ஆரோன் பின்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுக்க அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 26 (27) லபுஸ்ஷேன் 14 (21) அலெஸ் கேரி 19 (20) என முக்கிய பேட்ஸ்மென்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் பெரிய அளவில் ரன்களை சேர்க்காமல் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி சென்று கொண்டிருந்தனர்.
தனியொருவன் வார்னர்:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் இலங்கை பவுலர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தார். ஆனால் டிராவிஸ் ஹெட் 27 (33) கிளென் மேக்ஸ்வெல் 1 (3) என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் அவருக்கு கை கொடுக்காமல் அவுட்டாகி சென்றனர். ஒரு கட்டத்தில் 12 பவுண்டரியுடன் 99 (112) ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் துரதிர்ஷ்டவசமாக சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டு ஆட்டமிழந்ததால் அந்த அணியின் தோல்வி உறுதியானது.
OH MY GOD … David Warner gone on 99 🤭 … Trust me it hurt me for a moment and then suddenly 6 to Hafeez came into my mind 🙃🤗 pic.twitter.com/LDOV3P0WJm
— M Abu Bakar Farooq Tarar (@abubakarSays_) June 21, 2022
அந்த சமயத்தில் வந்த பட் கம்மின்ஸ் 35 (43) கிறிஸ் க்ரீன் 13 (25) ஆகியோர் முக்கிய ரன்கள் எடுத்து ஆட்டமிழந்ததால் கடைசி நேரத்தில் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் கேப்டன் ஷனாகா வீசிய கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்ட போது அதை எதிர்கொண்ட குனேமான் முதல் பந்தில் ரன்கள் எடுக்காமல் அதன்பின் 4, 2, 4, 4 என அடுத்த 4 பந்துகளில் பவுண்டரிகளை பறக்க விட்டு மிரட்டினாலும் கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று கேட்ச் கொடுத்து போராடி 15 (12) ஆட்டமிழந்தார்.
அதனால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இலங்கை 3 – 1* (5) என்ற கணக்கில் இந்த தொடரை கைப்பற்றி ஒருநாள் கிரிக்கெட்டில் 30 வருடங்களுக்கு பின் தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை மண்ணைக் கவ்வ வைத்து தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது. இலங்கை சார்பில் அதிகபட்சமாக கருணாரத்னே, டீ சில்வா, வண்டெர்செய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய அசலங்கா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
That victory feeling 🤗🤗#SLvAUS #CheerForLions pic.twitter.com/9EWa4H4eQl
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) June 21, 2022
Heartbreak for David Warner. He gone for 99 runs. But nevertheless he played a brilliant Innings in this difficult condition in this run chase against Sri Lanka. Well played, David Warner. pic.twitter.com/YBOFSx6sgq
— CricketMAN2 (@ImTanujSingh) June 21, 2022
20 வருட பரிதாபம்:
முன்னதாக இப்போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு தனி ஒருவனாக போராடிக்கொண்டிருந்த டேவிட் வார்னர் 99 ரன்களை எட்டியபோது டீ சில்வா வீசிய பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்தது துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தது ரசிகர்களை சோகமடைய வைத்தது. அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் 99 ரன்களில் ஸ்டம்பிங் முறையில் அவுட்டான 2-வது பேட்ஸ்மேன் மற்றும் முதல் ஆஸ்திரேலிய வீரர் என்ற பரிதாப சாதனையை அவர் படைத்தார்.
இதையும் படிங்க : மண்ணை கவ்விய ஆஸ்திரேலியா – 30 வருடங்களுக்கு பின் வரலாறு படைத்து மக்களை மகிழ வைத்த இலங்கை
இதற்கு முன் கடந்த 2002இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மன் 99 ரன்களில் வரலாற்றில் முதல் முறையாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். மேலும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றில் 99 ரன்களில் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த 5-வது வீரர் என்ற பரிதாப பெயரை பாகிஸ்தானின் மக்சூட் முஹம்மது, நியூசிலாந்தின் ஜான் ரைட், இந்தியாவின் விவிஎஸ் லக்ஷ்மன், வீரேந்திர சேவாக் ஆகியோருக்குப் பின் வார்னர் பெற்றுள்ளார்