கடந்த டி20 உ.கோ வாய்ப்பை இழந்த பின் என்னுடைய எழுச்சிக்கு அவர்தான் காரணம் – நெகிழ்ச்சியுடன் சஹால் பேசியது இதோ

chahal
- Advertisement -

வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு உலகின் அனைத்து முன்னணி அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்து லீக் சுற்றுடன் வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அவரது தலைமையில் கடந்த உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற அத்தனை டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா அடுத்ததாக ஆசிய கோப்பையில் களமிறங்குகிறது. இந்த தொடரிலிருந்து இறுதிக்கட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் ஏற்கனவே 80% அணி தேர்வு செய்யப்பட்டு விட்டதாக ரோகித் சர்மா கூறியுள்ளார்.

Yuzvendra-Chahal

- Advertisement -

அந்த அணியில் முதன்மை சுழல் பந்து வீச்சாளராக யுஸ்வென்ற சஹால் விளையாடுவது உறுதியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் அசத்தியதால் கடந்த 2016இல் இந்தியாவுக்காக அறிமுகமான இவர் தனது சிறப்பான செயல்பாடுகளால் அதுவரை முதன்மை சுழல் பந்து வீச்சாளராக இருந்த தமிழகத்தின் அஷ்வினை பின்னுக்குத்தள்ளி 2017 முதல் இந்திய வெள்ளைப் பந்து அணியில் நிரந்தரமான இடத்தை பிடித்தார்.

வீழ்ச்சியும் எழுச்சியும்:
ஆனால் பேட்ஸ்மேன் அடிக்கும் போதெல்லாம் தம்மிடம் வந்து ஆலோசனை தெரிவித்து நல்ல வழியில் செயல்பட உதவிய எம்எஸ் தோனி ஓய்வு பெற்ற 2019 உலகக்கோப்பைக்கு பின் அவரில்லாமல் தடுமாறிய இவர் பார்மை இழந்து சுமாராக பந்து வீசினார். அதனால் கடந்த வருடம் நடந்த டி20 உலக கோப்பையில் வாய்ப்பை இழந்த தம்மை வளர்த்த பெங்களூரு அணி நிர்வாகமும் கழற்றி விட்டது. அந்த நிலைமையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக முதல் முறையாக விளையாடிய இவர் தனது கேரியரில் உச்சபட்சமாக 17 போட்டிகளில் ஹாட்ரிக் உட்பட 27 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியை வென்று ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார்.

IND vs ENG Rohit Sharma Yuzvendra Chahal

அதனால் நல்ல பார்முக்கு திரும்பிய அவர் மீண்டும் இந்திய அணியில் நிலையான இடத்தைப் பிடித்து சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்படத் துவங்கியுள்ளார். அதன் காரணமாக இந்த வருட உலகக் கோப்பையில் தனது இடத்தை உறுதி செய்துள்ள அவர் தனது இந்த எழுச்சிக்கு புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தான் காரணமென்று வெளிப்படையாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ரோஹித் உத்வேகம்:
இது பற்றிய சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த ஐபிஎல் தொடரில் விளையாட போவதற்கு முன்பாக பவர்பிளே மற்றும் இறுதிக் கட்ட ஓவர்களில் பந்துவீச முயற்சிக்குமாறு ரோஹித் சர்மா கூறினார். அதன்பின் ஐபிஎல் தொடரின்போது சஞ்சு சாம்சனிடம் அதைத் தெரிவித்த எனக்கு அவர் ரோகித் சர்மா கூறியது போல் பவர்பிளே மற்றும் இறுதி கட்ட ஓவர்களில் பந்துவீசும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த உத்வேகத்தால் சிறப்பாக பந்து வீசிய எனக்கு இந்திய அணிக்கு திரும்பிய பின் ரோகித் சர்மா முழுமையான ஆதரவு கொடுத்தார்”

Chahal-1

“அவர் எப்போதும் என்னை விக்கெட் எடுக்கும் பவுலராக பயன்படுத்துவார். அனைத்து பவுலர்களும் எதிர்பார்க்கும் ஆதரவை நான் அவரிடமிருந்து பெற்றுள்ளேன். மேலும் போட்டியின் போது ஒரு பந்து வீச்சாளராக நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்ற எனது கருத்தையும் அவர் கேட்பார். இந்தியா பேட்டிங் செய்யும் போதும் ஒரு குறிப்பிட்ட தருணத்தை எடுத்துக்காட்டாக வைத்து அதில் நான் எப்படி பந்து வீசுவேன் என்று என்னிடம் கேட்பார். ஒரு பவுலராக ஒரு ஓவரில் நான் ஓய்ந்து விடக்கூடாது என்பதை அறிவேன்” என்று கூறினார்.

அதேபோல் தனது பந்து வீச்சில் முன்னேற்றம் அடைவதற்கு புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள ஜாம்பவான் ராகுல் டிராவிட் உதவியதை பற்றி சஹால் மேலும் பேசியது பின்வருமாறு. “அதே போல் இந்தியாவுக்காக விளையாடும் போது கடைசி கட்ட ஓவர்களில் பந்துவீசும் நிலை வரும் என்பதால் நீங்கள் கிரீஸை அதிகமாக பயன்படுத்தி ஃபுல்லர் லென்த் பந்துகளை வீசி பயிற்சி எடுங்கள் என்று ராகுல் டிராவிட்டும் உனக்கு ஆலோசனை தெரிவித்தார்”

“மேலும் ஐபிஎல் தொடரின்போது சஞ்சு சம்சனிடம் நான் தெளிவாக பேசியிருந்தேன். அவர் நான் விரும்பும் ஓவர்களையும் முழுமையான 4 ஓவர்களையும் பந்து வீச அனுமதி வழங்குவேன் என்று எனக்கு உத்தரவாதம் அளித்தார். அந்த வகையில் 16 – 20 வரையிலான ஓவர்களில் ஏதேனும் ஒரு ஓவரில் பந்து வீசி 15 ரன்களை கொடுத்தாலும் என்னால் சாதிக்க முடியும் என்று நம்பினேன்” எனக்கூறினார்.

Advertisement