ஐ.பி.எல் வரலாற்றில் சுனில் நரேனின் மாபெரும் சாதனையை சமன் செய்து அசத்திய யுஸ்வேந்திர சாஹல் – விவரம் இதோ

Chahal and Narine
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 31-வது லீக் போட்டியானது நேற்று சண்டிகார் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியானது முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தது.

சுனில் நரேனின் மாபெரும் சாதனையை சமன்செய்த யுஸ்வேந்திர சாஹல் :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய அந்த அணி : கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 15.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்கள் மட்டுமே குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்களையும், பிரியான்ஷ் ஆர்யா 22 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

கொல்கத்தா அணி சார்பாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி எளிதில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் பஞ்சாப் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 15.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ரன்களில் எதிரணியை வீழ்த்திய அணியாக சாதனை நிகழ்த்தியது. இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய யுஸ்வேந்திர சாஹல் 4 ஓவர்கள் பந்துவீசி 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் சுனில் நரேனின் மாபெரும் சாதனை ஒன்றினையும் அவர் சமன் செய்துள்ளார். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய வீரர் என்ற சாதனையில் சுனில் நரேன் 8 முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருந்தார்.

இதையும் படிங்க : கொல்கத்தாவை பாத்து தான் இதை செஞ்சோம்.. 111 ரன்ஸ் ஜெய்க்க இந்த பிளானை பின்பற்றினேன்.. சஹால் பேட்டி

இந்நிலையில் நேற்று யுஸ்வேந்திர சாஹல் எடுத்த 4 விக்கெட் மூலம் அவரும் 8 முறை ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக சுனில் நரேனின் சாதனையை சமன் செய்துள்ளார். அதுமட்டும் இன்றி கொல்கத்தா அணிக்கு எதிராக மட்டும் நான்காவது முறையாக அவர் ஒரு போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிகமுறை 4 விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement