லாக்டவுன் நேரத்தில் நிச்சயதார்த்தை முடித்த இந்திய அணியின் மற்றொரு இளம் வீரர் – வைரலாகும் புகைப்படம்

Ind

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் கிரிக்கெட் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் ரசிகர்களுக்கு அவ்வப்போது தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் கூறி ரசிக்க வைத்து வருகின்றனர்.

Chahal

மேலும் தற்போது ஐபிஎல் தொடர் தொடங்கும் என்று தகவல் கூறப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாகல் ஒரு செய்தியை அறிவித்துள்ளார். அது யாதெனில் 30 வயதான இவர் நடன இயக்குனரான தனஸ் ரீவர்மா என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சாஹல் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட இவர் “நாங்கள் ஆம் என்று சொன்னோம் எங்கள் குடும்பத்துடன்” என்று பதிவிட்டு இருக்கிறார். அவருக்கு சக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

We said “Yes” along with our families❤️ #rokaceremony

A post shared by Yuzvendra Chahal (@yuzi_chahal23) on

இந்திய அணியில் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக திகழும் இவர் 2016ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 52 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 91 விக்கெட்டுகளையும், 42 டி20 போட்டிகளில் விளையாடி 55 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் முக்கிய வீரராகவும் செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் இளம் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா தனது குழந்தை பிறந்ததை அறிவித்த நிலையில் தற்போது சாஹல் தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ளது ரசிகர்களின் மகிழ்ச்சியை இரட்டிப்பாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.