மலிங்கா உட்பட வேறு எந்த பவுலரும் செய்யாத புதிய ஐபிஎல் வரலாற்று படைத்த சஹால் – லெஜெண்ட் தான்

Chahal RR
- Advertisement -

அட்டகாசமாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் மே 7-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 52-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்து 20 ஓவர்களில் 189/5 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக 8 பவுண்டரி 1 சிக்சருடன் 56 (40) ரன்கள் எடுக்க அடுத்து வந்த ராஜபக்சா 2 பவுண்டரி 2 சிக்சருடன் 27 (18) ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இறுதியில் லியம் லிவிங்ஸ்டன் 22 (14) ரன்கள் ஜிதேஷ் சர்மா 4 பவுண்டரி 2 சிக்சருடன் 38* (18) ரன்கள் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

Johnny Bairstow

- Advertisement -

அதை தொடர்ந்து 190 என்ற கடினமான இலக்கை துரத்திய ராஜஸ்தானுக்கு தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் அதிரடியாக 5 பவுண்டரி 1 சிக்சருடன் 30 (16) ரன்கள் எடுக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 (12) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து பின்னடைவை ஏற்படுத்தினார். ஆனாலும் மறுபுறம் நீண்ட நாட்களுக்கு பின் கிடைத்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி அட்டகாசமாக பேட்டிங் செய்த இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி 2 சிக்சருடன் 68 (41) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து 15-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அசத்தல்:
நடுவரிசையில் 31 (32) ரன்கள் எடுத்த தேவ்தூத் படிக்கல் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். ஆனாலும் கடைசியில் 3 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட சிம்ரோன் ஹெட்மையர் 31* (16) ரன்கள் எடுத்து அதிரடி பினிஷிங் கொடுத்ததால் 19.4 ஓவர்களில் 190/4 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதனால் பங்கேற்ற 11 போட்டிகளில் 7-வது வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்தது.

PBKS vs RR Arshdeep Singh Jaiswal

மறுபுறம் பேட்டிங்கில் தேவையான ரன்களை எடுத்த போதிலும் பந்துவீச்சில் சொதப்பிய பஞ்சாப் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 6-வது தோல்வியை பதிவு செய்து 7-வது இடத்திற்கு பின்தங்கியது. அந்த அணிக்கு பந்துவீச்சில் இளம் வீரர் அர்ஷிதீப் சிங் மட்டும் தனி ஒருவனாக 2 விக்கெட்டுகளை எடுத்து போராட இதர பவுலர்கள் ரன்களை வாரி வழங்கியதால் தோல்வியடைந்தது. இதனால் எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

கலக்கல் சஹால்:
முன்னதாக இந்த போட்டியில் நீண்ட நாட்களுக்கு பின் வாய்ப்பு பெற்று அதிரடியாக 68 (41) ரன்கள் குவித்து ராஜஸ்தானின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் பந்துவீச்சில் அஸ்வின் உட்பட இதர பவுலர்களை காட்டிலும் அபாரமாக செயல்பட்ட அந்த அணி நட்சத்திரம் யுஸ்வென்ற சஹால் 3 விக்கெட்டுகளை எடுத்து துருப்புச் சீட்டாக செயல்பட்டார். கடந்த பல வருடங்களாக பெங்களூர் அணியில் விளையாடி வந்த அவரை அந்த அணி நிர்வாகம் தக்கவைக்காமல் கழற்றி விட்ட நிலையில் தம்மை வாங்கிய ராஜஸ்தான் அணிக்கு அசத்தலாக செயல்பட்டு வரும் அவர் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை 7.25 என்ற சூப்பரான எக்கனாமியில் எடுத்து அபாரமாக பந்து வீசி வருகிறார்.

Yuzvendra Chahal RR

அதுவும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்து பல சாதனைகளை படைத்து வரும் அவர் இந்த வருடம் இதுவரை நடைபெற்ற போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து அதற்கு வழங்கப்படும் கவுரவ ஊதா தொப்பியை தனது வசம் வைத்துள்ளார்.

- Advertisement -

1. முன்னதாக இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்த வருட ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை கடந்துள்ளார். மேலும் ஏற்கனவே கடந்த 2015, 2016, 2020 ஆகிய ஆண்டுகளிலும் இதே போல் 20 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் “ஐபிஎல் வரலாற்றில் 4 சீசனில் 20க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை எடுத்த முதல் பந்து வீச்சாளர்” என்ற அபார சாதனை படைத்துள்ளார். இதற்குமுன் லசித் மலிங்கா (2011, 2012, 2015) மற்றும் சுனில் நரேன் (2012, 2013, 2014) ஆகியோர் மட்டுமே அதிகப்பட்சமாக தலா 3 முறை எடுத்துள்ளனர்.

Chahal RR

2. அத்துடன் ராஜஸ்தானுகாக முதல் முறையாக விளையாடும் இவர் அந்த அணிக்காக ஒரு வருடத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சுழல்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். ராஜஸ்தானுக்காக ஒரு சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர்கள் இதோ:
1. ஜேம்ஸ் பல்க்னர் : 28 (2018)
2. சோஹைல் தன்வீர் : 22 (2008)
3. யுஸ்வென்ற சஹால் : 22* (2022)

இதையும் படிங்க : டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் மீண்டும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு. 2 வீரர்கள் ஐசோலேட்டட் – வெளியான தகவல்

3. இதுவரை 158 ஐபிஎல் விக்கெட்டுகளை எடுத்து ஆள் பார்க்க ஒல்லியாக இருந்தாலும் லெஜெண்ட் போல ஒவ்வொரு போட்டியிலும் சஹால் சாதனை படைத்து வருவது உண்மையாகவே பாராட்டத்தக்கதாகும்.

Advertisement