டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் மீண்டும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு. 2 வீரர்கள் ஐசோலேட்டட் – வெளியான தகவல்

DC vs PBKS 2
- Advertisement -

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகெங்கிலும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் நடைபெறாத ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு இந்திய ரசிகர்களை மகிழ்விக்க நிச்சயம் இந்தியாவில்தான் ஐபிஎல் தொடர் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிசிசி-யானது சரியான திட்டமிடுதலுடன் கூடிய அட்டவணையை வெளியிட்டு தற்போது நடப்பு 15-வது ஐபிஎல் தொடரை மிக சிறப்பாக நடத்தி வருகிறது.

Kane Williamson DC vs SRH

- Advertisement -

கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் அணிகளை உறுதி செய்யும் கட்டத்திற்கு நகர்ந்து உள்ள இந்த தொடரில் கொரோனா பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும் ஏற்கனவே டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் பாதிப்பு ஏற்பட்டது. அந்த வகையில் டெல்லி அணியை சேர்ந்த டிம் சைபர்ட் மற்றும் மிட்சல் மார்ஷ் போன்ற வீரர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

அதேபோன்று அந்த அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்டது. அதேபோன்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கும் கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு சில போட்டிகளை தவற விட்டார்.

Dc

இந்நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக டெல்லி அணியை சேர்ந்த வீரர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அதன்படி டெல்லி அணியை சேர்ந்த நெட் பவுலர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரோடு சேர்ந்து ஹோட்டல் அறையை பகிர்ந்து கொண்ட மற்றொரு பவுலரையும் டெல்லி அணி நிர்வாகம் தற்போது தனிமைப்படுத்தி உள்ளது.

- Advertisement -

அதனை தவிர்த்து வீரர்கள் அனைவரும் தற்போது பயிற்சியில் ஈடுபடாமல் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்று அவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே பயிற்சியில் பங்கேற்கவும் அடுத்த போட்டியில் விளையாடவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அவரு பேட்டிங் பண்றத பாக்கும்போது என்னை பாக்குற மாதிரியே இருக்கு – யுவராஜ் சிங் நெகிழ்ச்சி

இதுவரை இத்தொடரில் 10 போட்டிகளில் பங்கேற்றுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மேலும் நாளை மே 9-ஆம் தேதி நடைபெற இருக்கும் சென்னை அணிக்கு எதிரான போட்டியிலும் டெல்லி அணி பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement