அவரு பேட்டிங் பண்றத பாக்கும்போது என்னை பாக்குற மாதிரியே இருக்கு – யுவராஜ் சிங் நெகிழ்ச்சி

Yuvraj
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 26-ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 75% போட்டிகளை கடந்துள்ள இத்தொடரானது பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகளைத் தேர்வு செய்யும் கட்டத்தில் தற்போது பயணித்து வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே இந்திய அணியில் ஜொலித்த வீரர்கள் சற்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் இளம்வீரர்கள் அசத்தலான செயல்பாட்டினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

CSK vs SRH

- Advertisement -

மொத்தம் 10 அணிகள் இத்தொடரில் பங்கேற்று உள்ளதால் பல இளம் வீரர்களுக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் வாய்ப்பு கிடைத்த பல இளம் வீரர்கள் தங்களது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் சன் ரைசர்ஸ் அணியில் விளையாடி வரும் ஒரு இளம் வீரர் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : சன்ரைஸ் அணியில் விளையாடி வரும் அபிஷேக் சர்மா பேட்டிங் செய்யும்போது என்னை பார்ப்பது போலவே இருக்கிறது.

abhishek sharma

தற்போது 21 வயதான அவர் புல் ஷாட், பிலிக் ஷாட், கட் ஷாட் என சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் ஸ்டைல் அப்படியே என்னை போன்று உள்ளது. ஏற்கனவே ஷிவம் துபே அதே போல் சிறப்பாக விளையாடுவார் என்றாலும் அதனை செய்ய நீண்ட காலம் எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

ஆனால் தற்போது 21 வயதிலேயே அபிஷேக் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இவர் எதிர்காலத்தில் நிச்சயம் சிறப்பான வீரராக விளங்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளது என யுவ்ராஜ் சிங் பாராட்டியுள்ளார். 21 வயதாகும் அபிஷேக் சர்மா 2018 ஆம் ஆண்டு முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வந்தாலும் இந்த சீசனில் சன்ரைஸ் அணிக்காக துவக்க வீரராக களமிறங்கி அசத்தி வருகிறார்.

இதையும் படிங்க : சிக்ஸர் மழை ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 10 பேட்ஸ்மேன்கள்

இதுவரை இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 331 ரன்களை விளாசியுள்ளார். அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கெதிராக 75 ரன்கள் அடித்து அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement