சிக்ஸர் மழை ! ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 10 பேட்ஸ்மேன்கள்

Gayle
- Advertisement -

ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு வெற்றி என்பது விருந்து என்றால் அதைப் பார்க்கும் ரசிகர்களுக்கு அதில் பேட்ஸ்மேன்கள் பறக்கவிடும் அதிரடியான சிக்ஸர்கள் தான் மிகப்பெரிய விருந்தாகும். பொதுவாக பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த ஒரு தொடராக கருதப்படும் ஐபிஎல் தொடரில் பெரும்பாலான சமயங்களில் பவுலர்கள் தங்களது திறமையை பயன்படுத்தி எதிரணி பேட்ஸ்மேன்களை பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியாமல் கட்டுபடுத்தி விடுவார்கள்.

pollard 1

- Advertisement -

ஆனால் ஒருசில தருணங்களில் மட்டுமே எப்படி போட்டாலும் அடிப்பேன் என்று கங்கணம் கட்டும் பேட்ஸ்மென்கள் எதிரணி பவுலர்களுக்கு கருணை காட்டாமல் ரன் மழை பொழிந்து மைதானத்தில் அமர்ந்திருக்கும் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனைப்பார்கள். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர்களை அடித்த டாப் பேட்ஸ்மேன்களைப் பற்றி பார்ப்போம்.

10. கிரண் பொல்லார்ட்: 2019 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்புக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த ஒரு போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 198 ரன்கள் இலக்கை துரத்திய மும்பைக்கு டாப் ஆர்டர் வீரர்கள் ஏமாற்றிய நிலையில் களமிறங்கிய கைரன் பொல்லார்ட் 3 பவுண்டரி 10 சிக்ஸர்களை பறக்க விட்டு 83 ரன்கள் விளாசி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்து இப்பட்டியலில் 10-வது இடம் பிடிக்கிறார்.

Gayle

9. கிறிஸ் கெயில்: 2018 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்துக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப்க்கு பழைய பன்னீர்செல்வமாய் வெறும் 1 பவுண்டரியும் 11 இமாலய சிக்ஸர்களையும் பறக்கவிட்ட கிறிஸ் கெயில் 104* (63) விளாசியதால் அந்த அணி 193/3 ரன்கள் சேர்த்து பின்னர் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய நாளில் சிக்சர்களை மட்டுமே அடிப்பேன் என அடம் பிடித்த கெயில் 11 சிக்சர்களை பறக்கவிட்டு 9-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

8. முரளி விஜய்: 2010 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தானுக்கு எதிராக சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 32-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னைக்கு 8 பவுண்டரியும் 11 சிக்சர்களையும் பறக்க விட்ட தமிழக வீரர் முரளி விஜய் 127 (56) ரன்கள் நொறுக்கியதால் அந்த அணி 246/5 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எடுத்து பின்னர் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அன்றைய நாளில் 11 சிக்சர்கள் பறக்கவிட்ட முரளிவிஜய் ஆட்டநாயகன் விருதை வென்று 8-வது இடம் பிடிக்கிறார்.

MuraliVijay1

7. சனாத் ஜெயசூரியா: 2008 ஐபிஎல் தொடரில் சென்னைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 153 ரன்கள் இலக்கை 9 பவுண்டரிகள் 11 சிக்சர்கள் பறக்க விட்டு 114* (48) ரன்களை விளாசிய இலங்கையின் சனத் ஜெயசூரியா 9 விக்கெட் வித்தியாச வெற்றிக்கு முக்கிய பங்காற்றி பட்டியலில் 7-வது இடம் பிடிக்கிறார்.

- Advertisement -

6. ஆண்ட்ரே ரசல்: 2018 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னைக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 202/6 எடுக்க அதை வெற்றிகரமாக சேசிங் செய்த சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இருப்பினும் அப்போட்டியில் கொல்கத்தாவுக்காக வெறும் 1 பவுண்டரியும் 11 முரட்டுத்தனமான சிக்ஸர்களை பறக்கவிட்ட ஆண்ட்ரே ரசல் இப்பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறார்.

russel

5. கிறிஸ் கெயில்: 2015 ஐபிஎல் தொடரில் பஞ்சாப்க்கு எதிரான ஒரு போட்டியில் 7 பவுண்டரி 12 சிக்ஸர்களை பறக்கவிட்ட கிறிஸ் கெயில் 117 (57) ரன்கள் விளாசியதால் 226/3 ரன்கள் சேர்த்த பெங்களூரு பின்னர் பஞ்சாப்பை 88 ரன்களுக்குள் சுருட்டி 138 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

4. ஏபி டீ வில்லியர்ஸ்: 2016 ஐபிஎல் தொடரில் அப்போதைய குஜராத்துக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு டீ வில்லியர்ஸ் 129* (52) ரன்களை தெறிக்கவிட்ட நிலையில் கூடவே விராட் கோலி 109 (55) ரன்களும் எடுக்க அந்த அணி 248/3 எடுத்தது. அதில் 10 பவுண்டரியும் 12 சிக்ஸர்களை பறக்கவிட்ட டீ வில்லியர்ஸ் 4-வது இடம் பிடிக்க அன்றைய நாளில் பெங்களூரு 144 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

abd 1

3. கிறிஸ் கெயில்: 2012 ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான போட்டியில் அதன் பவுலர்களை புரட்டி எடுத்து 128* (62) ரன்களை விளாசியதால் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 215 ரன்கள் குவித்து பின்னர் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த நாளில் 7 பவுண்டரி 13 மெகா சிக்சர்களை பறக்கவிட்ட கெயில் இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

2. ப்ரெண்டன் மெக்கல்லம்: 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் வரலாற்றின் முதல் போட்டியில் பெங்களூருவை எதிர்கொண்ட கொல்கத்தாவுக்கு முதல் போட்டியிலேயே முரட்டு அடி அடித்த நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 158* (73) ரன்கள் விளாசி ஐபிஎல் தொடருக்கு வெறித்தனமான துவக்கத்தை கொடுத்ததால் அந்த அணி 222/3 ரன்கள் எடுத்து பின்னர் பெங்களூருவை வெறும் 82 ரன்களில் சுருட்டி 140 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அந்த முதல் போட்டியிலேயே ரசிகர்களை 10 பவுண்டரி 13 சிக்சர்கள் பறக்கவிட்டு மகிழ்வித்த மெக்கல்லம் இப்பட்டியலில் 2வது இடம் பிடிக்கிறார்.

1. கிறிஸ் கெயில்: 2013இல் ஐபிஎல் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசின் சூறாவளி புயல் கெயில் ஒரு மிகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடினார். அப்போதைய புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக சின்னசாமி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூருவுக்கு அந்த அணி பவுலர்களை வதம் செய்த அவர் 175* (66) ரன்கள் விளாசி 263/5 ரன்கள் எடுக்க உதவினார். இறுதியில் புனேவை 130 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடிக்க அன்றைய நாளில் ரசிகர்களை 13 பவுண்டரி 17 சிக்ஸர்களால் நனைத்த கெயில் இந்த பட்டியலில் முதலிடம் பிடிக்கிறார்.

Advertisement