- Advertisement -
உலக கிரிக்கெட்

விளையாடி கொண்டிருக்கும்போது மைதானத்தை விட்டு பாதியில் வெளியேறிய யுவ்ராஜ் – என்ன ஆச்சு அவருக்கு

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் டொராண்டோ இன்டர்நேஷனல் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

ஐபிஎல் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த யுவராஜ் சிங் தற்போது கனடா லீக்கில் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் எதிரணி நிர்ணயித்த 137 ரன்களை எதிர்த்து ஆடும்போது 5 ஆவது வீரராக யுவராஜ் சிங் இறங்கி அபாரமாக ஆடினார்.

அப்போது பவாத் அகமத் வீசிய பந்தி ஸ்வீப் செய்ய முயன்ற யுவராஜ் சிங் ஸ்வீப் செய்ய முடியவில்லை. அதனால் தசை பிடிப்பு அவருக்கு ஏற்பட்டது இதன் காரணமாக அவர் உடனடியாக மைதானத்திற்கு பாதியில் வெளியேறினார். இருப்பினும் இலக்கு எளிதானது என்பதால் டொராண்டோ அணி இலக்கை எளிதாக கடந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by