- Advertisement -
உலக கிரிக்கெட்

இந்தியா மாதிரி அணிக்கு எதிராக இதை செய்ங்க.. சேனலை க்ளோஸ் பண்ணிட்றேன்.. பாபருக்கு பஷித் சவால்

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி 2009க்குப்பின் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. கடைசியாக நடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் பாபர் அசாம் தலைமையில் அதிர்ஷ்டத்துடன் அசத்திய பாகிஸ்தான் இறுதிப்போட்டி வரை சென்று தோற்றது. அதைத் தொடர்ந்து 2023 ஆசிய மற்றும் உலகக் கோப்பையில் அவரது தலைமையிலான பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

அந்த தோல்விகளுக்கு பொறுப்பேற்ற பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து கேப்டனாக நியமிக்கப்பட்ட சாகின் அப்ரிடி தலைமையில் நியூசிலாந்து மண்ணில் 4 – 1 (5) என்ற கணக்கில் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அதன் காரணமாக அவரை கழற்றி விட்டுள்ள பாகிஸ்தான் வாரியம் மீண்டும் பாபர் அசாமை கேப்டனாக நியமித்துள்ளது.

- Advertisement -

ஓப்பன் சவால்:
முன்னதாக சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற இந்திய ஜாம்பவான்களை விட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்று பாகிஸ்தான் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் பாராட்டுவது வழக்கமாகும். ஆனால் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக தடுமாறும் பாபர் அசாம் ஜிம்பாப்பே, அயர்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக மட்டுமே பெரிய ரன்கள் அடித்து தரவரிசையில் உலகில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக முன்னேறியதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் விமர்சித்தனர்.

அதனால் ஒரு தரப்பு ரசிகர்கள் அவரை ஜிம்பாபர் என்று சமூக வலைதளங்களில் கலாய்ப்பதும் வழக்கமாகும். இந்நிலையில் நீங்கள் தரமான ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்றால் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து காட்டுங்கள் என்று பாபர் அசானுக்கு முன்னாள் பாகிஸ்தான் வீரர் பஷிட் அலி வெளிப்படையான சவாலை விடுத்துள்ளார். ஒருவேளை அதை செய்தால் தம்முடைய யூட்யூப் சேனலை மூடுவதாக அறிவித்துள்ள அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை அமெரிக்கா, அயர்லாந்து போன்ற அணிகளுக்கு எதிராக அல்லாமல் டாப் அணிகளுக்கு எதிராக பாபர் அசாம் 3 தொடர்ச்சியான சிக்ஸர்களை அடித்தால் என்னுடைய யூடியூப் சேனலை நான் மூடி விடுகிறேன். அந்த சிக்சர்கள் டாப் அணிகளுக்கு எதிராக வரவேண்டும். கத்துக்குட்டிகளுக்கு எதிராக அல்ல. ஒருவேளை இதை ஏற்றுக் கொண்டால் “நான் இந்த சவாலை ஏற்றுக் கொண்டேன்” என்று அவர் வெளிப்படையாக சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: 7 விக்கெட்ஸ்.. ஃபார்முக்கு வந்த பாண்டியா.. மும்பையின் போராட்டத்தை கடைசியில் கலைத்த கமின்ஸ்

“ஒருவேளை உலகக் கோப்பையில் 3 சிக்ஸர்களை அடிக்காமல் போனால் அவர் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்க கூடாது” என்று விமர்சித்துள்ளது பாகிஸ்தான் ரசிகர்களிடம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பாபர் அசாம் பதிலடி கொடுப்பாரா அல்லது சிக்ஸர்கள் அடித்து செயலில் தனது தரத்தை காட்டுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -