இங்கிலாந்து கோப்பையை வென்றாலும் என் மனது முழுவதும் இவர்களின் போராட்டத்தை மட்டுமே நினைக்கிறது – யுவ்ராஜ்

Yuvraj-Singh
- Advertisement -

உலக கோப்பை இறுதி போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று மோதின.

eng vs nz

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதன் பிறகு ஆட துவங்கிய இங்கிலாந்து அணி, ஐம்பது ஒவேரில் 241 ரன்கள் எடுத்தது. இதன் காரணமாக மேட்ச் டை ஆனது. அதனை தொடர்ந்து சூப்பர் ஓவர் நிர்ணயிக்கப்பட்டது. அந்த சூப்பர் ஓவரும் டை ஆனதால் பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றது என்று அறிவிக்கப்பட்டது.

England

இந்நிலையில் இந்த இறுதிப் போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதை அவர் குறிப்பிட்டதாவது : என்னால் இந்த விதிமுறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை ஆனாலும் விதிமுறை விதிமுறை தான் என்பதனால் ஏற்றுக்கொண்டு இங்கிலாந்து அணி உலக கோப்பையை வென்றதற்காக வாழ்த்துகிறேன். இருப்பினும் என் மனம் நியூசிலாந்து அணி கடைசி வரை போராடியதை மட்டுமே நினைக்கிறது. நல்ல போட்டி சிறப்பான இறுதி ஆட்டம் என்று யுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விதிமுறை குறித்து பலரும் பல விமர்சனங்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விதிமுறையில் உள்ள முறைகேடு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

Advertisement