அவ்ளோ பெரிய வீரரை வெளிய உக்கார வச்சா எப்படி கொல்கத்தா டீம் ஜெயிக்கும் – யுவராஜ் சிங் கருத்து

Yuvraj
Advertisement

நடப்பு 15 ஆவது ஐபிஎல் தொடரானது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடரில் பெரிய அணிகள் என்று பார்க்கப்பட்ட சில அணிகள் தொடர்ச்சியாக சரிவை சந்தித்து வருகிறது. அதே வேளையில் புதிதாக இணைந்த குஜராத் மற்றும் லக்னோ அணிகள் சிறப்பாக விளையாடி தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் வீரர்களை அடிப்படையாக வைத்து பார்க்கையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக தான் இருக்கிறது.

PBKS vs KKR Umesh

ஆனாலும் அவர்கள் தற்போது தொடர்ச்சியாக ஐந்து தோல்விகளை சந்தித்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் ரசல், சுனில் நரைன், பின்ச், கம்மின்ஸ் போன்ற வெளிநாட்டு வீரர்களும் ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், உமேஷ் யாதவ், நிதிஷ் ராணா என இந்திய நட்சத்திரங்களும் இருப்பதனால் இந்த அணி மிகப் பலம் வாய்ந்த அணியாகவே இருக்கிறது.

- Advertisement -

ஆனாலும் அடுத்தடுத்து இவர்கள் அடைந்துவரும் தோல்விகள் காரணமாக தற்போது அந்த அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது. இப்படி தொடர்ச்சியாக கொல்கத்தா தோல்விகளை சந்தித்த அணியில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களே காரணம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த போட்டியில் கொல்கத்தா அணி தோல்வியை சந்திக்க பேட் கம்மின்ஸ் அணியில் இல்லாததே காரணம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்கத்தா அணியின் அணித்தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

- Advertisement -

பேட் கம்மின்ஸ் அணியில் இல்லாதது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில் அவர் காயமடைந்தால் தவிர மற்றபடி வெளியில் அமர வைக்க கூடிய வீரர் கிடையாது. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர். அவரைப் போன்ற ஒரு வீரரை 2-3 போட்டிகளில் ஏற்பட்ட சறுக்கல் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றுவது சரியான கிடையாது.

இதையும் படிங்க : டக் அவுட் ஆன வேகத்துல நேரா ரசல் எங்க போயிருக்காரு பாருங்க – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

அவர் அணியிலிருந்து இருந்தால் நிச்சயம் 2-3 போட்டிகளில் வெற்றி பெற்று கொடுப்பார் என்பதே என்னுடைய கருத்து என அதிரடியான கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யுவ்ராஜ் சிங்கின் இந்த கருத்தினை ஆமோதித்து ரசிகர்களும் பேட் கம்மின்ஸ்சுக்கு ஆதரவாக சில கருத்துகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement