டக் அவுட் ஆன வேகத்துல நேரா ரசல் எங்க போயிருக்காரு பாருங்க – கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்

Russell
- Advertisement -

கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஆண்ட்ரே ரசல் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆன பிறகு மைதானத்தில் இருந்து வெளியேறி அவர் செய்த சம்பவம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. ஐபிஎல் தொடரின் 41-லீக் ஆட்டத்தில் நேற்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா அணியானது தொடர்ந்து விக்கெட்டுகளை இழக்கவே அந்த சரிவில் இருந்து மீள முடியாமல் இறுதியில் 20 ஓவர்களின் முடிவில் 146 ரன்களை மட்டுமே குவித்தது.

Kuldeep Yadhav vs KKR

- Advertisement -

அதனைத் தொடர்ந்து 147 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய டெல்லி அணியானது 19-வது ஓவரின் முடிவிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் குவித்து இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. கொல்கத்தா அணி தொடர்ச்சியாக பெறும் ஐந்தாவது தோல்வியாக இந்தத் தோல்வி அவர்களுக்கு அமைந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது குல்தீப் யாதவ் வீசிய 14-வது ஓவரின் முதல் பந்தில் கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 83 ரன்களுக்கு 5 விக்கெட்டாக இருந்தது. அந்த நேரத்தில் களமிறங்கிய ரசல் அதிரடியாக விளையாடி கொல்கத்தா அணிக்கு பெரிய அளவில் ரன்களை சேர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

russell 1

ஆனால் முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் இருந்ததால் அவர் அடுத்து ரன் அடிக்க வேண்டும் என்கிற அழுத்தம் காரணமாக தான் சந்தித்த 3-வது பந்தை இறங்கி வந்து சிக்ஸர் அடிக்க முயன்றார். ஆனால் பந்து நேராக கீப்பர் கைக்கு செல்லவே அவரை டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் ஸ்டம்பிங் செய்தார்.

- Advertisement -

இப்படி ரசல் டக் அவுட் ஆகி வெளியேறியதும் நேராக ஓய்வறைக்கு சென்று சாப்பிட ஆரம்பித்தார். அவரது இந்த செயல் வீடியோவாகவும், புகைப்படங்களாகவும் இணையத்தில் வைரலானது. இதனைக் கண்ட ரசிகர்கள் இணையத்தில் அவரை கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விராட் கோலி மற்றும் ரோஹித்தின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து முதன்முறையாக வாய் திறந்த – கங்குலி

ஆட்டமிழந்ததும் ரசலுக்கு பசித்து விட்டது போல இதன் காரணமாகவே அவர் சாப்பிட சென்றுவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் அவரை சமூக வலைதளம் மூலமாக கிண்டல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement