விராட் கோலி மற்றும் ரோஹித்தின் மோசமான பேட்டிங் பார்ம் குறித்து முதன்முறையாக வாய் திறந்த – கங்குலி

Ganguly
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி கடந்த ஒரு மாதங்களாக பல எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. அதில் யாருமே எதிர்பாராத வகையில் நிறைய கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் என பெயரெடுத்த மும்பையும் மற்றும் சென்னையும் தொடர் தோல்விகளால் புள்ளிப் பட்டியலில் கடைசி 2 இடங்களில் திண்டாடுகின்றன.

- Advertisement -

அது கூட பரவாயில்லை என்பது போல் இந்தியாவின் டாப் 2 நட்சத்திர வீரர்களான விராட் கோலியும் ரோகித் சர்மாவும் இந்த தொடரில் ரன்கள் அடிக்க முடியாமல் திணறுவது இந்திய ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் கடந்த பல வருடங்களாக ரன் மழை பொழிந்து பல வெற்றிகளைத் தேடி கொடுத்து இந்திய பேட்டிங் துறையில் முதுகெலும்பாக விளங்கும் இவர்கள் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் தவிக்கிறார்கள்.

ஏமாற்றும் கிங் கோலி – ஹிட்மேன் ரோஹித்:
வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக இந்தியாவின் புதிய கேப்டனும் முன்னாள் கேப்டனும் இப்படி மோசமான பார்மில் திண்டாடுவது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கவலையாக மாறியுள்ளது. இதில் இந்தியாவின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரோகித் சர்மா இந்த வருடம் பங்கேற்ற 8 போட்டிகளில் 153* ரன்களை 19.13 என்ற மோசமான சராசரியில் எடுத்தது அவர் தலைமை வகிக்கும் மும்பை அணியின் வெற்றியிலும் பாதித்து தொடர் 8 தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Rcbvsmi

அவர் கூட பார்ம் அவுட் இல்லை எனக் கூறும் வகையில் கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் அதிரடியாக பேட்டிங் செய்து மிகச் சிறப்பான தொடக்கத்தை பெற்று திடீரென ஆட்டமிழந்து வருகிறார். ஆனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ள விராட் கோலி இந்த வருடம் முதல் போட்டியில் 41* ரன்கள் குவித்த நல்ல தொடக்கம் பெற்றாலும் அதன்பின் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிலும் வரலாற்றிலேயே முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதுவரை 9 போட்டிகளில் களமிறங்கியுள்ள அவர் வெறும் 128* ரன்களை 16.00 என்ற மோசமான சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

கடைசியாக கடந்த 2019இல் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த அவர் அதன்பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என மொத்தம் 102* போட்டிகளாக அடுத்த சதத்தை அடிக்க முடியாமல் திணறி வருகிறார். அதைவிட இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு முறையும் அவுட்டாகி செல்லும்போதெல்லாம் அவரின் முகமும் உடலும் பார்மில் என்பதை தெளிவாக காட்டுகிறது. அதன் காரணமாக உடனடியாக ஐபிஎல் தொடரை விட்டுவிட்டு 2 – 3 மாதங்கள் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புவதற்கான முடிவை உடனடியாக அவர் எடுக்க வேண்டும் என்று ரவி சாஸ்திரி உட்பட நிறைய முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Ganguly-1

கங்குலி ஆதரவு:
இந்நிலையில் விராட் கோலி – ரோகித் சர்மா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்களின் இந்த சோதனையான காலத்தில் பிசிசிஐ தலைவர் மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள் என்பதால் நிச்சயம் ஃபார்முக்கு திரும்புவார்கள் என்று நான் உறுதியாக கூறுவேன். அவர்கள் விரைவில் ரன்களை அடிப்பார்கள் என்று நம்புகிறேன். விராட் கோலியை பொருத்தவரை அவரின் மனதில் என்ன ஓடுகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர் மிக விரைவில் தனது பார்மை மீட்டெடுத்து நல்லபடியாக ரன்களை அடிப்பார் என்று உறுதிப்பட நம்புகிறேன். அவர் ஒரு மிகச் சிறந்த வீரர்” என தெரிவித்தார்.

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் உட்பட நிறைய ஜாம்பவான்களும் இதுபோன்ற சோதனை காலத்தை சந்தித்துள்ளதாக கூறும் கங்குலி நிச்சயமாக தற்போதைய இந்திய பேட்டிங்கின் இரு துருவங்களாக கருதப்படும் விராட் கோலி – ரோகித் சர்மா மீண்டும் பார்முக்கு திரும்புவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்தியாவின் கேப்டனாக இருந்த விராட் கோலி பதவி விலகியதற்கு கங்குலி தான் காரணம் என்ற செய்திகள் உலா வரும் நிலையில் அவரின் இந்த கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இதையும் படிங்க : ஐ.பி.எல் வரலாற்றில் மாபெரும் சாதனையை அசத்தலாக நிகழ்த்திய மாயாஜால சுழல் நாயகன் சுனில் நரேன் – விவரம் இதோ

அத்துடன் வரும் ஜூன் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரின் போது விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும், டி20 உலக கோப்பையில் அவர் நேரடியாக தேர்வு செய்யப்படுவது சந்தேகம் போன்ற செய்திகள் கடந்த சில தினங்களாக வெளிவந்த நிலையில் கங்குலியின் இந்த மிகப்பெரிய ஆதரவு விராட் கோலி ரசிகர்களை நிம்மதி அடைய வைத்துள்ளது.

Advertisement