சூப்பர் ஓவரில் இவங்க 2 பேர் தான் விளையாடி இருக்கனும். ரோஹித் செய்தது தவறு – யுவ்ராஜ் விளாசல்

Yuvraj
- Advertisement -

மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற 10 ஆவது லீக் போட்டியில் 202 ரன்களை சேசிங் செய்து விளையாடிய முமபை அணி துவக்கத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் இளம் வீரர் இஷான் கிஷன் மற்றும் அனுபவ வீரரான பொல்லார்ட் ஆகியோர் சாத்தியமற்ற போட்டியை இறுதியில் “டை” ஆக்கினார்கள். இவர்கள் இருவரும் 119 பாட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிறப்பாக விளையாடி 99 ரன்களை குவித்த இஷான் கிஷன் மற்றும் 60 ரன்களை அதிரடியாக குவித்த பொல்லார்ட் ஆகியோர் சூப்பர் ஓவரில் களம் இறங்குவார்கள் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இவற்றிற்கெல்லாம் மாறாக பொல்லார்ட் உடன் ஹார்டிக் பாண்டியா சூப்பர் ஓவரில் விளையாட வந்தார்.

- Advertisement -

அந்த சூப்பர் ஓவரை பெங்களூர் அணி சார்பாக சைனி வீச அந்த ஓவரில் இந்த ஜோடி சோபிக்க தவறியது. சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்த்த பொல்லார்ட் 4 பந்துகளை சந்தித்த நிலையில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இறுதியில் சூப்பர் ஓவர் முடிவில் மும்பை அணி 7 ரன்களை மட்டுமே குவித்தது. அதன் பின்னர் 8 ரன்கள் அடித்து போட்டியை பெங்களூர் அணி எளிதில் வென்றது.

Pollard 1

இந்நிலையில் இந்த போட்டி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை பதிவிட்டுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் : நான் இந்த போட்டியின் சூப்பர் ஓவரில் பொல்லார்ட் மற்றும் இஷான் கிசன் ஆகியோரே இறங்குவார்கள் என்று நினைத்தேன். அவர்கள்தான் இறங்கி இருக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் இருவரும் தான் இந்த போட்டியில் செட்டான பேட்ஸ்மேன்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் அவர் சூப்பர் ஓவரில் ரோஹித் தவறு செய்துவிட்டார் என்றும் அவர் எடுத்த முடிவால் சூப்பர் ஓவரில் முடிவு மாறியது என சுற்றி வளைத்து தனது கருத்தை ரோஹித்துக்கு எதிராக பதிவு செய்துள்ளார். அவரின் இன்று ட்வீட் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமின்றி ரசிகர்கள் பலரும் அவர்கள் இருவருமே சூப்பர் ஓவரில் விளையாடி இருக்க வேண்டும் என்றும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement