தோனியால் எனக்கு அந்த வாய்ப்பு பறிபோனது. 2007 ஆம் ஆண்டு நடந்த சம்பவத்தை நினைவு கூறிய – யுவ்ராஜ் சிங்

Yuvraj

இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு தலை சிறந்த வீரராக திகழ்ந்தார். குறிப்பாக 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி கோப்பை ஆகிய முக்கிய தொடர்களில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக விளங்கினார். பல ஆண்டுகள் இவர் கிரிக்கெட் விளையாடினாலும் இந்திய தேசிய அணிக்காக இவர் கேப்டன்சி செய்யவில்லை என்ற ஏக்கம் மட்டும் இன்றளவும் அவரிடம் இருந்து வருகிறது.

Yuvi 2

இந்நிலையில் தற்போது 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பவத்தை பற்றி தனியார் ஊடகத்திற்கு யுவ்ராஜ் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து கூறுகையில் : 2007 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய அணி தோற்ற போது நாங்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் இருந்தோம். அணியில் இருந்த அனைத்து வீரர்களும் மிக மன உளைச்சலுக்கு ஆளாகி அணியே சற்று சோகமான சூழ்நிலையில் இருந்தது. அந்த கால கட்டங்களில் இந்திய அணிக்குள் நிறைய குழப்பங்கள் இருந்தது.

- Advertisement -

அது மட்டுமின்றி 50 ஓவர் உலகக் கோப்பை முடிந்த பிறகு இரண்டு மாதகால இங்கிலாந்து பயணம் மற்றும் தென் ஆப்பிரிக்க, அயர்லாந்து என அடுத்தடுத்து தொடர்கள் இருந்ததால் நான்கு மாதங்களுக்கு இந்திய வீரர்கள் வெளிநாட்டு பயணத்தில் கவனம் செலுத்த வேண்டி இருந்தது. அந்த காலகட்டத்தில் ஏற்கனவே அடைந்த தோல்வியால் சீனியர் வீரர்கள் இந்த பெரிய தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள நினைத்தார்கள். மேலும் அதே நேரத்தில் ஐசிசி முதல்முறையாக நடந்தவிருந்த டி20 உலகக்கோப்பை தொடரும் எதிரில் வந்தது.

Yuvi 3

ஆனால் அந்த டி20 உலககோப்பையை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வேளையில் எனக்கு நிச்சயம் இந்திய அணியின் டி20 உலக கோப்பை தொடரின் கேப்டன் பதவி கிடைக்கும் என்று நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் இறுதியில் என் பெயர் அறிவிக்கப்படாமல் தோனியின் பெயர் கேப்டனாக அறிவிக்கப்பட்டது. எனது கேப்டன் பதவி பறிபோனது எல்லாம் கவலை இல்லை. யார் கேப்டனாக இருந்தாலும் நான் 100% இந்திய அணிக்காக எனது பங்களிப்பை அளிப்பதில் உறுதியாக இருந்தேன். அணியின் கேப்டனாக டிராவிட் இருந்தாலும் சரி, கங்குலி இருந்தாலும் சரி, டோனி இருந்தாலும் சரி வேறு யாராக இருந்தாலும் சரி நான் அணிக்காக சிறந்த வீரராக இருக்கவே விரும்பினேன்.

- Advertisement -

T20 wc

அதைத்தான் நான் ஓய்வு பெறும் வரை செய்தேன் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது நாங்கள் ஒரு இளம் அணியாக அந்த தொடரை எதிர்கொண்டோம். முதல் முறையாக டி20 போட்டிகளில் விளையாடுவதால் எங்களுக்கு அந்த போட்டியை பற்றிய உத்தியெல்லாம் பெரிதாக தெரியாது இருப்பினும் எங்களுக்குத் தெரிந்த வகையில் விளையாடி அந்த தொடரை கைப்பற்றினோம் என்று யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement