- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உன்ன நான் ரெடி பண்றதுக்கு காரணமே இதுதான்.. சொல்லி சொல்லி வளர்த்த யுவ்ராஜ் சிங் – அவரே கூறிய தகவல்

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா கடந்த 2024-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி இதுவரை 37 போட்டிகளில் விளையாடி 2 சதம் மற்றும் 8 அரைசதம் என 37 ரன்கள் சராசரியுடனும் 194 ஸ்ட்ரைக் ரேட்டுடனும் 1267 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். ரோகித் சர்மாவிற்கு பிறகு தற்போது நிரந்தர துவக்க வீரராக டி20 அணியில் இடம் பிடித்து விளையாடியும் வருகிறார்.

அபிஷேக் சர்மாவை உருவாக்கியது குறித்து பேசிய : யுவராஜ் சிங்

இவ்வேளையில் தற்போது உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவர் 929 என்கிற உச்சகட்ட புள்ளிகளுடன் இருக்கும் வேளையில் இந்திய அணியின் முதன்மை துவக்க வீரராக எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை தொடரிலும் விளையாட இருக்கிறார். அவரது பேட்டிங் ஃபார்ம் மிகச் சிறப்பாக இருப்பதனால் இந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா அசத்துவார் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தனது பயிற்சியின் கீழ் முன்னேற்றத்தை கண்ட அபிஷேக் சர்மாவை தான் எதற்காக தயார்படுத்தினேன்? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் யுவராஜ் சிங் சில வெளிப்படையான கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : சுப்மன் கில் ஏற்கனவே இந்திய அணிக்காக விளையாடி கொண்டிருக்கும் வேளையில் அபிஷேக் ஷர்மா போன்ற ஒரு திறமையான வீரரையும் அங்கு கொண்டு செல்ல அவரை நான் தயார்படுத்த வேண்டும் என்று நினைத்தேன்.

அதற்காக நான் அவருக்கு நான்கு ஆண்டுகள் திட்டத்தை வகுத்தேன். அந்த வகையில் அந்த நான்கு ஆண்டுகளாக அவர் சரியான விடையங்களை பின்பற்றி தனது திறனை முன்னேற்றியதால் சரியாக நான்கு ஆண்டுகள் மூன்று மாதம் என்கிற இடைவெளியில் அவர் இந்திய அணியில் இணைந்தார். நான் அவரை தயார் செய்யும் போதெல்லாம் அவரிடம் ஒரு விடயத்தை தெளிவாக சொன்னேன்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒன்னும் பிரச்சனை இல்ல.. இன்னும் ஓரிரு நாளில் வாஷிங்டன் சுந்தர் ரெடி ஆகிடுவாரு – வெளியான தகவல்

ஐ.பி.எல் தொடரில் விளையாடுவதற்காக நான் உன்னை இங்கு ஊக்குவிக்க வரவில்லை. நீ இந்திய நாட்டிற்காக விளையாடி நமது அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். அதற்காகவே நான் உன்னை தயார் படுத்துகிறேன் என்று கூறினேன். அவரும் என் பேச்சை கேட்டு சரியான முறையில் தயாராகி தற்போது மிகப்பெரிய வீரராக மாறியுள்ளார் என யுவ்ராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -