சச்சினுக்கு சப்போர்ட் பண்ணப்போய் எனக்கு கிடைக்க வேண்டிய கேப்டன் பதவி தோனிக்கு போய்டுச்சு – முன்னாள் வீரர்கள் ஆதங்கம்

sachin 1
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னைக்கு இந்த வருடம் அதன் கேப்டனாக இருந்த எம்எஸ் தோனி திடீரென பதவி விலகி கேப்டன்சிப் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஆனால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஜடேஜா வெற்றியை பதிவு செய்யத் தவறியது மட்டுமல்லாமல் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பியதால் அந்த பொறுப்பே வேண்டாம் என்று மீண்டும் அவரிடமே வழங்கி விட்டார். அந்த வகையில் ஜடேஜா தலைமையில் தடுமாறிக் கொண்டிருந்த சென்னை கேப்டனாக தோனி திரும்பியதும் ஒருசில பெரிய வெற்றிகளை குவித்து மீண்டும் அதே பழைய வலுவான சென்னையாக காட்சியளிக்கிறது.

Dhoni-3

- Advertisement -

அதுதான் தோனி என்பது போல் ஒரு கேப்டனுக்கு அடையாளமாகவும் இலக்கணமாகவும் திகழ்வது உண்மையாகவே அவரின் கேப்டன்ஷிப் தலைமை பண்பை காட்டுகிறது. இப்படி இன்றியமையாத கேப்டனாக உருவெடுத்துள்ள எம்எஸ் தோனி 2007இல் டி20 உலக கோப்பையில் முதல் முறையாக கேப்டனாக நியமிக்கப்பட்ட போது அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாதவராக இருந்தார்.

Trophies Won By MS Dhoni

ஆனால் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு முதல் தொடரிலேயே டி20 உலககோப்பை, 2011இல் உலக கோப்பை, 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி என இந்தியாவிற்கு 3 விதமான உலகக் கோப்பைகளை வென்று வரலாற்றில் காலத்தால் அழிக்க முடியாத மகத்தான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்.

கேப்டன் தோனி:
அதேபோல் 2010 – 2011 வாக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக அவர் தலைமையில் இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாகவும் வலம் வந்து பல சரித்திர வெற்றிகளை ருசித்தது. அதன்பின் 2014இல் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகி அந்த பொறுப்பை விராட் கோலியிடம் ஒப்படைத்த அவர் 2017 முதல் மொத்த கேப்டன்ஷிப் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்து அவர் தலைமையில் சாதாரண வீரராக 2019 வரை விளையாடி 2020இல் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

2007இல் சௌரவ் கங்குலி – கிரேக் சேப்பல் மோதலால் அந்த வருடம் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற உலக கோப்பையில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. ஆனால் அதே வருடத்தின் இறுதியில் டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த தோனி அதன்பின் இன்று இந்திய கிரிக்கெட் புதிய உச்சத்தில் ஜொலிப்பதற்கு முக்கிய காரணமாக திகழ்கிறார் என்று கூறினால் மிகையாகாது.

சச்சினுக்கு சப்போர்ட்:
இந்நிலையில் 2007இல் கிரேக் சேப்பல் இருந்தபோது அவருக்கு எதிராகவும் சச்சினுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதால் தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் தமக்கு கிடைக்க வேண்டிய கேப்டன்ஷிப் பதவி தோனியிடம் சென்றதாக அந்த சமயத்தில் இந்தியாவின் அடுத்த கேப்டன் எனக் கருதப்பட்ட முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங் தற்போது தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Yuvi

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் கேப்டனாகியிருக்க வேண்டும். அப்போதுதான் கிரேக் சேப்பல் சம்பவம் நடந்தது. அந்த நிலையில் சேப்பல் அல்லது சச்சின் ஆகியோரில் யாரையாவது ஒருவரை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் நான் எனது சக வீரருக்கு (சச்சின்) ஆதரவு கொடுத்தேன். என்னைப் போலவே நிறைய வீரர்களும் ஆதரவு கொடுத்தனர். ஆனால் அது ஒருசில பிசிசிஐ அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. அதனால் யாரை வேண்டுமானாலும் கேப்டனாக்குவோம் ஆனால் என்னை அல்ல என்ற செய்தியையே நான் கேட்டேன்”

“அது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. ஆனால் திடீரென்று துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது சேவாக்க்கும் அணியில் இல்லை. எனவே சம்பந்தமே இல்லாமல் எம்எஸ் தோனி 2007 டி20 உலகக்கோப்பைக்கு கேப்டனானார். இருப்பினும் அப்போது நான் தான் கேப்டனாக வருவேன் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் வீரேந்திர சேவாக் சீனியராக இருந்தார். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. மேலும் ராகுல் டிராவிட் ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்க நான் துணை கேப்டனாக இருந்தேன். அந்த வகையில் அடுத்த கேப்டனாக நான் வருவேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்த முடிவு எனக்கு எதிராக அமைந்தது என்றாலும் அதற்காக நான் வருந்தவில்லை. ஒருவேளை இப்போது அதுபோன்ற நிகழ்வு நடந்தாலும் கூட நான் எனது சக அணி வீரருக்கே ஆதரவு கொடுத்திருப்பேன்” என்று கூறினார்.

Yuvraj 1

2007இல் ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணிக்கு தாம் துணை கேப்டனாக இருந்ததால் அடுத்த கேப்டனாக வருவேன் என்று எதிர்பார்த்ததாக கூறும் யுவராஜ் சிங் சச்சினுக்கு ஆதரவு கொடுத்த காரணத்தால் ஒருசில பிசிசிஐ அதிகாரிகள் அதை துடுத்து விட்டதாக குற்றம் சாட்டுகிறார். மேலும் தன்னை விட சீனியராக இருந்த சேவாக்கை கேப்டனாக நியமிக்காத பிசிசிஐ சம்பந்தமே இல்லாமல் எம்எஸ் தோனியை கேப்டனாக நியமித்தது என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement