- Advertisement -
இந்திய கிரிக்கெட்

நிறைய வாய்ப்பு கிடைக்கல.. ஆனாலும் இன்னைக்கு நீ ஆடுன ஆட்டம் இருக்கே.. சஞ்சு சாம்சனை பாராட்டிய – யுவ்ராஜ் சிங்

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றதன் காரணமாக 2026 டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் குவித்தது.

சஞ்சு சாம்சனை பாராட்டிய : யுவ்ராஜ் சிங்

பின்னர் அடுத்ததாக 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்து. இந்த வெற்றியின் மூலம் 2026 டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு நேற்றைய போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

அதோடு பல்வேறு தரப்பில் இருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் சஞ்சு சாம்சனின் இந்த ஆட்டத்தை பாராட்டி தனது சமூகவலைதள பக்கத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த உலககோப்பை தொடரில் நிறைய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க : போன மேட்ச்ல அதிரடியா விளையாடவும், இந்த போட்டியை முடிச்சி குடுக்கவும்.. இதுதான் வித்தியாசம் – சஞ்சு சாம்சன் பேச்சு

ஆனால் முக்கியமான நேரத்தில் கிடைத்த வாய்ப்பை தனதாக்கி கொண்ட அவர் தனது வாழ்நாளில் மிகச் சிறப்பான இன்னிங்க்ஸை விளையாடி உள்ளார். நீங்கள் உண்மையிலேயே ஒரு சாம்பியன். எப்போதும் அமைதியாகவும், தயாராகவும் இருங்கள் எப்போதும் உங்களது நம்பிக்கையை விட்டு விட வேண்டாம். உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் என சஞ்சு சாம்சனை யுவ்ராஜ் சிங் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -