போன மேட்ச்ல அதிரடியா விளையாடவும், இந்த போட்டியை முடிச்சி குடுக்கவும்.. இதுதான் வித்தியாசம் – சஞ்சு சாம்சன் பேச்சு

Sanju Samson MoM
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மிக முக்கியமான சூப்பர் 8 சுற்றின் கடைசி ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது. ஏற்கனவே இந்த சூப்பர் 8 சுற்றின் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியிடம் படுமோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா? என்ற கேள்வி எழுந்தது.

என்னுடைய பொறுப்பான ஆட்டத்துக்கு இதுதான் காரணம் : சஞ்சு சாம்சன்

ஆனால் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து அரையிறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது. இதன் காரணமாக அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட காத்திருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியின் போது இந்திய அணி 196 ரன்கள் என்கிற சவாலான இலக்கை நோக்கி தங்களது சேசிங் தொடர்ந்த நிலையில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இந்திய அணியின் துவக்க வீரரான சஞ்சு சாம்சன் 50 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் என 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவரது இந்த பிரமாதமான ஆட்டம் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றதோடு அவருக்கு ஆட்டநாயகன் விருதையும் பெற்று தந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டி முடிந்து தனது சிறப்பான செயல்பாடு குறித்து பேசிய சஞ்சு சாம்சன் கடந்த போட்டியில் விளையாடிய விதம் குறித்தும், இந்த ஆட்டத்தின் விளையாடிய விதம் குறித்தும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஜிம்பாப்வே அணிக்கெதிரான போட்டியின் போது நான் விளையாடுகையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. எனவே மிகப்பெரிய ஸ்கோரை அவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று முதல் பந்தில் இருந்து அதிரடியாக அடித்து விளையாட முடிவு செய்தேன்.

- Advertisement -

ஆனால் இன்றைய ஆட்டம் முற்றிலும் வித்தியாசமானது. அதாவது நாங்கள் சேசிங் செய்யப்போகிறோம் எனவே எவ்வளவு தூரம் என்னால் நின்று பேட்டிங் செய்ய முடியுமோ? அதுவரை நிற்க வேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டும் இன்றி ஒருபுறம் விக்கெட்டுகளை நாங்கள் தொடர்ந்து இழந்து கொண்டே இருந்ததால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினேன்.

இதையும் படிங்க : மாபெரும் சாதனையுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்த இந்திய அணி – விவரம் இதோ

அந்த வகையில் இந்த போட்டியில் இந்திய அணியை வெற்றிகரமாக இலக்கை நோக்கி அழைத்துச் சென்றதில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய வாழ்நாளில் மிகச்சிறந்த ஒரு நாள் என சஞ்சு சாம்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement