Yuvraj Singh : இவர்களின் ஒத்துழைப்போடு இன்னும் ஒரு சில தினங்களில் ஓய்வு அறிவிப்பினை வெளியிட உள்ளேன் – யுவராஜ் சிங்

இந்திய அணியின் அதிரடி வீரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதிலிருந்து மூன்று உலகக் கோப்பை தொடர்களில் (2003,2007,2011) அவர்

yuvraj
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி வீரரும், ஆல் ரவுண்டருமான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக கடந்த 2000 ஆம் ஆண்டு அறிமுகமானார். அதிலிருந்து மூன்று உலகக் கோப்பை தொடர்களில் (2003,2007,2011) அவர் பங்கேற்று விளையாடி உள்ளார். இந்த உலக கோப்பை தொடரில் அவர் தேர்வானதால் ஓய்வு குறித்த முக்கிய அறிவிப்பை தற்போது யுவராஜ் சிங் வெளியிட்டுள்ளார்.

YuvrajSingh

- Advertisement -

அதன்படி யுவராஜ் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் : இந்த உலகக் கோப்பைத் தொடரில் நான் தேர்வாகமல் போனதால் இதற்கடுத்து எனக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம். அதனால் இந்த ஆண்டோடு நான் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியிலும் இருந்து இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். மேலும் ஓய்வு பெற்றபின் பிசிசிஐ நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் பங்கேற்கும் திட்டமும் என்னிடம் உள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகளிலும் நான் தொடர்ந்து விளையாட விரும்புகிறேன்.

மேலும், பிசிசிஐ ஒத்துழைப்புக்காக நான் தற்போது காத்திருக்கிறேன். அவர்கள் ஒத்துழைத்தால் என்னுடைய ஓய்வு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

yuvraj

இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரிலும், 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர் யுவராஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது அவர் புற்று நோய் பாதிப்பினால் அவதிப்படும் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்காக வெற்றியைப் பெற்றுத் தந்ததோடு அந்த தொடரின் தொடர்நாயகன் விருதையும் பெற்றார்.

- Advertisement -

YuvrajSingh

பிறகு 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்குப் பின் புற்றுநோய்க்கான சிகிச்சை எடுக்க வெளிநாடு சென்ற இவர் மீண்டும் இந்திய அணிக்கு கடினப்பட்டு திரும்பினார். இருப்பினும் ஆனால் இவரால் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவில்லை. அதனால் 2017 ஆம் ஆண்டு இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். அதன் பிறகு வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.

yuvidhoni

இந்த உலக கோப்பையில் தனக்கான இடம் கிடைக்காததால் இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளார் யுவராஜ். மேலும் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் அவர் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் இந்த ஓய்வு முடிவினால் அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வந்த யுவராஜ் சிங் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

dhoni

38 வயதான யுவராஜ் சிங் இதுவரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும், 304 ஒருநாள் போட்டிகளிலும், 58 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஆக பல ஆண்டுகள் வலம் வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement