இந்தியாவுக்காக அதை செய்ய தயார்.. ஐசிசி தொடரில் சந்திக்கும் தோல்வியை நிறுத்த.. யுவி வெளியிட்ட அறிவிப்பு

Yuvraj Singh
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியா சாதாரண இரு தரப்பு தொடர்களில் எதிரணிகளை தெறிக்க விட்டு தொடர்ச்சியான வெற்றிகளை பெற்று ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாகவும் ஜொலித்து வருகிறது. ஆனால் ஐசிசி தொடரில் மட்டும் முக்கியமான நாக் அவுட் போட்டியில் ஏதோ ஒரு வகையில் சொதப்பும் இந்தியா தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

கடைசியாக 2013ஆம் ஆண்டு தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற இந்தியா அதன் பின் கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற எந்த ஐசிசி தொடரிலும் கோப்பையை வெல்ல முடியாமல் திண்டாடி வருகிறது. இந்நிலையில் திறமை இருந்தும் திடமான மனநிலை இல்லாததே நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தடுமாறுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று உலகக்கோப்பை நாயகன் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியாவுக்காக தயார்:
எனவே அந்த அம்சத்தில் உதவுவதற்காக வருங்காலங்களில் ஐசிசி தொடர்களில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்படுவதற்கு தாம் தயார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நாம் நிறைய ஃபைனல்களில் விளையாடியும் கோப்பையை வெல்ல முடியாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. 2017 ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த போட்டியில் நானும் இருந்தேன்”

“அடுத்து வரும் வருடங்களில் கண்டிப்பாக நாம் அதில் வேலை செய்வோம். ஒரு நாடாக ஒரு அணியாக அழுத்தத்தின் கீழ் நாம் சிறப்பாக செயல்படுவது அவசியம். ஆஸ்திரேலியா 6 உலகக் கோப்பைகளை வென்றுள்ள நிலையில் நாம் 2 மட்டுமே வென்றுள்ளோம். எனவே சாம்பியன்ஷிப்பை எப்படி வெல்ல வேண்டும் என்பதில் நாம் வேலை செய்ய வேண்டும். குறிப்பாக அழுத்தமான பெரிய தருணங்கள் வரும் போது நாம் மனதளவில் சரியான முடிவுகளை எடுக்க தயாராக இருக்க வேண்டும்”

- Advertisement -

“இங்கே இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அழுத்தமான சூழ்நிலைகளை எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதை பற்றி நான் பேசுகிறேன். நம்மிடம் அழுத்தத்தின் கீழ் அசத்தக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். ஆனால் அங்கே ஓரிருவருக்கு பதிலாக மொத்த அணியும் அசத்த வேண்டும். அதற்கு ஆலோசகராக இருப்பதை நான் விரும்புகிறேன். வருங்காலங்களில் என்னுடைய குழந்தைகள் செட்டிலான பின் கிரிக்கெட்டுக்கு திரும்பி இளம் வீரர்களுக்கு உதவ விரும்புகிறேன். பெரிய தொடர்களில் நாம் மனதளவில் சவால்களை சந்திக்கிறோம்”

இதையும் படிங்க: கவலைப்படாதீங்க இந்த டைம்.. இந்தியா மீது அந்த புகார் சொல்ல மாட்டோம்.. இங்கிலாந்து வீரர் பேட்டி

“அந்த அம்சத்தில் நமது வீரர்களுடன் வருங்காலத்தில் நான் வேலை செய்ய வருவேன். குறிப்பாக மிடில் ஆர்டரில் என்னால் நிறைய பங்காற்ற முடியும் என்று நம்புகிறேன். அதனால் நமது இளம் வீரர்களுக்கு டெக்னிக் மட்டுமில்லாமல் மனதளவில் சமாளிப்பதற்கான உதவியை செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். மேலும் குஜராத் ஐபிஎல் அணியில் ஆலோசகராக செயல்படுவதற்கான வாய்ப்பு வந்தும் தற்போதைக்கு அதை தவிர்த்துள்ளதாக யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement