மலிங்கா, பும்ரா கூட பண்ணாத சாதனையை பவுலிங்கில் படைத்திருக்கும் யுவ்ராஜ் சிங் – விவரம் இதோ

- Advertisement -

ஐபிஎல் தொடர் கடந்த 12 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய திருவிழாவைப் போல் நடைபெறும் இந்தத்தொடர் இந்தாண்டு வெளிநாட்டில் நடக்கிறது. இதற்காக ஏற்பாடுகள் தற்போது வரை மிக வேகமாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் வருடா வருடம் சாதனைகள் படைக்கப்படும். குறிப்பாக பேட்டிங் சாதனைகள் தான் எப்போதும் அதிகமாக இருக்கும்.

IPL-bowlers-1

- Advertisement -

அதேவகையில் பந்துவீச்சாளர்கள் அதிக விக்கெட் எடுப்பது அல்லது hat-trick எடுப்பது தான் மிகப்பெரிய சாதனையாக இருக்கும். ஐபிஎல் தொடரில் தற்போது வரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 3 முறை எடுத்தியிருக்கிறார்.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காகவும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும், டெல்லி கேப்பிடல் அணிக்காகவும் விளையாடிய போது ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் அமித் மிஷ்ரா.
அதனைத் தாண்டி யாரும் எதிர்பாராத வகையில் யுவராஜ் சிங் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்திருக்கிறார்.

2001 ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிய போது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் செய்திருந்தார்.
யுவராஜ் சிங் செய்த இந்த சாதனையை,ஐபிஎல் தொடரின் சிறந்த பந்துவீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, லசித் மலிங்கா போன்ற வீரர்கள் கூட செய்ததில்லை. அப்படிப்பட்ட சாதனையை தான் படைத்துவிட்டு ஓய்வு பெற்றிருக்கிறார் யுவராஜ்சிங்.

இந்த வருடம் ஐபிஎல் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி துவங்கி நவம்பர் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அட்டவணை நேற்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement