ரோஹித்துக்கு வயசாயிடுச்சி. அவருக்கு பதிலா இவரை கேப்டனா மாத்துங்க. கரெக்ட்டா இருக்கும் – யுவ்ராஜ் சிங் யோசனை

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது கேப்டன் பதவியின் மீது இருந்த அழுத்தம் காரணமாக பேட்டிங்கில் சோபிக்க முடியவில்லை என்பதன் காரணமாக மூன்று வகையான கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியை துறந்தார். அதனை தொடர்ந்து இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். தற்போது 3 வடிவிலான இந்திய அணிக்கும் கேப்டனாக இருக்கும் ரோகித் ஷர்மாவின் செயல்பாடு சற்று மந்தமாகி வருகிறது.

Rohit Sharma Duck Out

- Advertisement -

தற்போது 34 வயதாகும் ரோகித் சர்மா இன்னும் எத்தனை ஆண்டுகள் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருப்பார் என்பதை உறுதியாக கூறமுடியாது. இந்நிலையில் ரோகித் சர்மாவை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கி இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் தனது கருத்தினை வெளிப்படையாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

தற்போது ரோகித் சர்மாவிற்கு 34 வயது ஆகியுள்ளது. அதன் காரணமாக எத்தனை நாட்கள் அவரால் கேப்டன்சி செய்ய முடியும் என்பது கேள்விக்குறி தான். இதனால் இளம் வீரர் ஒருவருக்கு டெஸ்ட் கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக நினைக்கிறேன். அந்த வகையில் ரிஷப் பண்ட்டை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். அவர் இந்திய அணியை வழிநடத்த சரியான நபர் என்று நினைக்கிறேன்.

Pant

எனவே அவரை டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கலாம். 24 வயது என்பது அவருக்கு ஒரு தடை கிடையாது. முதலில் அவருக்கு ஒரு ஆறு மாதமோ அல்லது ஒரு வருடமோ வாய்ப்பை வழங்கி எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இருக்கவேண்டும். அப்படி அவருக்கு அந்த வாய்ப்பை வழங்கும் போது நிச்சயம் திறமையான கேப்டன்சியை அவர் வெளிப்படுத்துவார்.

- Advertisement -

ஏற்கனவே ஐபிஎல் தொடரில் டெல்லி அணியை தற்போது சரியாக வழி நடத்தி வரும் அவர் நிச்சயம் விராட் கோலி மற்றும் தோனி ஆகியோரிடமிருந்து பெற்ற அனுபவங்களை வைத்து டெஸ்ட் அணியை சிறப்பாக வழிநடத்துவார் என்று நினைக்கிறேன். இதை பற்றி இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தினர் என்ன நினைக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதையும் படிங்க : செம கடுப்பாகி டீ.வி.ரிமோட்டை தூக்கி போட்டு வொடச்சிட்டேன் – ஓப்பனாக பேசிய டெல்லி கோச் ரிக்கி பாண்டிங்

ஆனால் என்னை பொறுத்தவரை டெஸ்ட் அணியை வழிநடத்த பண்ட் சரியானவர் என்று நினைக்கிறேன். ரிஷப் பண்ட் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பர் என்பதனால் அவருக்கு கேப்டன் பதவி வழங்கலாம். நிச்சயம் இந்திய அணியின் எதிர்கால ஜாம்பவானாக அவர் இருப்பார் என யுவ்ராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement