செம கடுப்பாகி டீ.வி.ரிமோட்டை தூக்கி போட்டு வொடச்சிட்டேன் – ஓப்பனாக பேசிய டெல்லி கோச் ரிக்கி பாண்டிங்

Ponting
- Advertisement -

டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக பணியாற்றி வரும் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி அணியில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். ஏற்கனவே டெல்லியைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மிச்செல் மார்ஷ் மற்றும் டிம் சைபர்ட் என வீரர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவே அந்த அணி வீரர்கள் ஓரிரு நாட்கள் மொத்தமாகவே தனிமைப்படுத்தப் பட்டது.

Dc

- Advertisement -

அப்போது அணியின் பயிற்சியாளரான ரிக்கி பாண்டிங் குடும்பத்தை சேர்ந்த சிலருக்கு கொரோனா தொற்று ஏற்படவே அவர்களுடன் சேர்ந்து பாண்டிக்கும் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டார். இதன் காரணமாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின்போது பாண்டிங் அணி வீரர்களுடன் இணையாமல் ஹோட்டல் அறையிலேயே இருந்தார்.

இந்நிலையில் அவ்வாறு தான் ஹோட்டல் அறையில் இருந்தபோது ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கையில் ரிமோட்டை கோபத்தில் உடைத்ததாக வெளிப்படையான கருத்து ஒன்றினை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஹோட்டல் அறையில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு தற்போது மீண்டும் அணியில் இணைந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சீசனில் நாங்கள் ஒரு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியையும் மாறிமாறி சந்தித்து வந்தோம்.

Ponting

ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றது மிகவும் வருத்தத்தை அளித்தது. நான் எப்போதும் வீரர்களிடம் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுவேன். போட்டியில் 38 ஓவர்கள் நீங்கள் நன்றாக ஆடி இருந்தால்கூட இரண்டு ஓவர்களில் ஆட்டம் மாறும். அந்த வகையில்தான் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வியை சந்தித்து இருக்கிறோம். எனவே இந்த தவறுகளிலிருந்து மீண்டும் பாடத்தை கற்றுக் கொண்டு வெற்றிக்கான வழியை காணுங்கள் என்று கூறியிருந்தேன்.

- Advertisement -

அதோடு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது எங்கள் அணியின் வீரர்களின் செயல்பாடுகளை நினைத்தே டென்ஷனான நான் டிவி ரிமோட்டை தூக்கி சுவற்றில் எரிந்து உடைத்து விட்டேன். அதே போன்று சில தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி எறிந்தேன்.

இதையும் படிங்க : டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகியதை தொடர்ந்து அடுத்த கேப்டன் இவர்தானாம் – வெளியான அறிவிப்பு

பயிற்சியாளராக மைதானத்தில் இருந்தால் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால் ஹோட்டல் அறையில் நான் தனிமையில் இருந்ததால் மிகவும் எரிச்சலாகி இதுபோன்று நடந்து கொண்டேன் என பாண்டிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement