டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து ஜோ ரூட் விலகியதை தொடர்ந்து அடுத்த கேப்டன் இவர்தானாம் – வெளியான அறிவிப்பு

- Advertisement -

இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த 31 வயதான ஜோ ரூட் நடைபெற்று முடிந்த ஆஷஸ் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்ததன் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இங்கிலாந்து அணி சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இருக்கும் அலைஸ்டர் குக்கிற்கு அடுத்து ஜோ ரூட் திகழ்ந்து வந்தார்.

Root

- Advertisement -

இந்நிலையில் அடுத்ததடுத்த தோல்விகள் காரணமாக விமர்சனத்தை சந்தித்த ஜோ ரூட் தற்போது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி உள்ளதால் அடுத்த டெஸ்ட் அணி புதிய கேப்டன் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் இருந்து வந்தது.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்ஸை நியமிக்க அணி நிர்வாகம் விரும்புகிறது.

Stokes

மேலும் அதற்கு ஒப்புக் கொண்டுள்ளதால் நிச்சயம் இன்னும் ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. மேலும் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு தனித்தனியாக இங்கிலாந்து அணியானது கேப்டன்களை நியமிக்க உள்ளது.

- Advertisement -

அதே போன்று இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர்களையும் அவர்கள் அறிவிக்க உள்ளனர். அதன்படி ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என தனித்தனியாக பயிற்சியாளர்களையும் நியமிக்க திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பிரம்மாண்ட வளர்ச்சி! பிரபல பத்திரிக்கை எடுத்த கணக்கெடுப்பு – ஒவ்வொரு அணிகளின் மதிப்பு இதோ

அதன்படி ஒருநாள் கிரிக்கெட்டிற்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான கேரி க்ரிஸ்டனையும், டெஸ்ட் கிரிக்கெட் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான சைமன் கேடிச்சையும் பயிற்சியாளராக நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement