பிரம்மாண்ட வளர்ச்சி! பிரபல பத்திரிக்கை எடுத்த கணக்கெடுப்பு – ஒவ்வொரு அணிகளின் மதிப்பு இதோ

IPL 2022
- Advertisement -

கடந்த 2008-ஆம் ஆண்டு 8 அணிகளுடன் ஒரு சாதாரண உள்ளூர் தொடராக உருவாக்கப்பட்ட ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு வருடமும் தன்னைத் தானே மெருகேற்றிக் கொண்டு பல பரிணாமங்களை பெற்று இன்று உலக அளவில் பிரசித்தி பெற்ற நம்பர்-1 பிரீமியர் லீக் டி20 தொடராக விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் நடைபெறும் பெரும்பாலான போட்டிகள் கடைசி ஓவரின் கடைசி பந்து வரை செல்வதால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடான தரத்தை பெற்றுள்ள ஐபிஎல் தொடர் ஐசிசி நடத்தும் உலக கோப்பைகளை விட மிகவும் தரமானதாக உருவெடுத்துள்ளது.

IPL 2022 (2)

- Advertisement -

அதேபோல் பணத்திலும் பல ஆயிரம் கோடிகளை வருமானமாகவும் ஈட்டும் இந்த தொடர் ஐசிசி ஈட்டும் வருமானத்தை விட பண மழையை பொழிவதால் ஐசிசியை விட பிசிசிஐ இன்று பணக்கார கிரிக்கெட் வாரியமாக உருவெடுத்து உலக கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் ஒரு அங்கமாக மாறியுள்ளது.

என்பிஏ’வை மிஞ்சும் ஐபிஎல்:
இந்த அடுத்தடுத்த வளர்ச்சியின் காரணமாக இந்த வருடம் லக்னோ 7000+ கோடி குஜராத் 5000+ கோடி என்ற வாயைப் பிளக்க வைக்கும் தொகைகளில் 2 புதிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டு 10 அணிகள் கொண்ட பிரம்மாண்ட தொடராக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் உலகிலேயே ஈடு இணை இல்லாத ஒரு கிரிக்கெட் தொடராக வளர்ந்துள்ளது. இந்நிலையில் உலகின் பல்வேறு நிறுவனங்கள், நட்சத்திரங்கள் மற்றும் இது போன்ற விளையாட்டு தொடர்களின் மதிப்பை தீர்மானிக்கும் புகழ்பெற்ற ஃபோர்பஸ் நாளிதழ் ஐபிஎல் மற்றும் அதில் பங்கேற்கும் அணிகளின் மதிப்புகளை வெளியிட்டுள்ளது.

அதன்படி கடந்த 2009 ஒரு ஐபிஎல் அணியின் மதிப்பு வெறும் 67 மில்லியன் டாலராக இருந்த நிலையில் இன்று அது 24% மடங்கு உயர்ந்து 1.04 பில்லியன் டாலராக வளர்ச்சி கண்டுள்ளதாக அறிவித்துள்ள அந்த நாளிதழ் ஐபிஎல் என்பது முதலீட்டாளர்களின் தங்கச் சுரங்கமாக மாறியுள்ளது என்று பாராட்டியுள்ளது. அந்த வகையில் தற்போதைய ஐபிஎல் தொடரில் விளையாடும் ஒவ்வொரு அணிகளின் மதிப்பைப் பற்றி ஃபோர்பஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள விவரங்களை பார்ப்போம்.

- Advertisement -

1. மும்பை: 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் தொடர் தோல்விகளால் தவித்தாலும் அந்த அணியின் மொத்த மதிப்பு 1.3 பில்லியன் டாலராக உள்ளது. இது இந்திய ரூபாயில் 9962 கோடியாகும்.

இது அமெரிக்காவில் விளையாடப்படும் பிரபல கூடைப்பந்து விளையாட்டு தொடரான என்பிஏ தொடரில் பங்கேற்கும் 6 அணிகளின் மதிப்பு மற்றும் என்ஹச்எல், எம்எல்எஸ் போன்ற விளையாட்டு தொடர்களில் பங்கேற்கும் ஒவ்வொரு அணிகளின் மதிப்பை விட அதிகம் என்று ஃபோர்பஸ் தெரிவிக்கிறது.

- Advertisement -

2. சென்னை: எம்எஸ் தோனியை நட்சத்திரமாக கொண்டு 4 கோப்பைகளை வென்று 2-வது வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் இந்தப் பட்டியலில் 1.5 பில்லியன் மதிப்புடன் 2-வது இடம் பிடிக்கிறது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 8811 கோடியாகும்.

3. கொல்கத்தா: 2 கோப்பைகளை வென்று 3-வது வெற்றிகரமான அணியாக திகழும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1.1 பில்லியன் மதிப்புடன் இப்பட்டியலில் 3-ம் இடம் பிடிக்கிறது. அதன் இந்திய ரூபாயின் மதிப்பு 8428 கோடியாகும்.

- Advertisement -

4. லக்னோ: இந்த வருடம் 7090 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு உருவாக்கப்பட்ட சஞ்சீவ் கோனேகா நிறுவனத்தின் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி முதல் வருடத்திலேயே நேரடியாக 8236 கோடி ரூபாய் இந்திய மதிப்புடன் 1.075 பில்லியன் டாலர் மதிப்புடன் இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறது.

5. டெல்லி: தலைநகர் டெல்லியை மையமாகக் கொண்ட டெல்லி கேப்பிடல்ஸ் இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடிக்கும் வகையில் 1.035 பில்லியன் டாலர் அதாவது 7930 கோடி ரூபாய் மதிப்பை பெற்றுள்ளது.

6. பெங்களூரு: நட்சத்திரம் விராட் கோலியை மையமாகக் கொண்டு ரசிகர்களிடையே புகழ் பெற்றுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 1.025 பில்லியன் டாலர் மதிப்பில் 7853 கோடி ரூபாய் இந்திய மதிப்புடன் இப்பட்டியலில் 6-வது இடம் பிடிக்கிறது.

7. ராஜஸ்தான்: வரலாற்றின் முதல் ஐபிஎல் சாம்பியனாக விளங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் 1 பில்லியன் டாலர் அதாவது 7662 கோடி ரூபாய் மதிப்பை பெற்று இந்த பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

8. ஹைதெராபாத்: தமிழகத்தின் சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 970 மில்லியன் டாலர் எனும் 7432 கோடி ரூபாய்க்கு இணையான இந்திய மதிப்பைப் பெற்று இந்தப் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

9. பஞ்சாப்: பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா உரிமையாளராக இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி 7087 கோடி ரூபாய் அதாவது 925 மில்லியன் டாலர் மதிப்பில் இந்தப் பட்டியலில் 9-வது இடம் பிடிக்கிறது.

இதையும் படிங்க : சுரேஷ் ரெய்னா செய்த அதே தவறால் இடத்தை இழந்து நிற்கும் தமிழக வீரர் – சீக்கிரம் சரி செய்வாரா?

10. குஜராத்: இந்த வருடம் உருவாக்கப்பட்ட மற்றொரு புதிய ஐபிஎல் அணியான குஜராத் டைட்டன்ஸ் ஹர்திக் பாண்டியா தலைமையில் சக்கை போடு போட்டு வெற்றி நடை போட்டு வரும் நிலையில் அந்த அணியின் மதிப்பு 850 மில்லியன் டாலராக 10-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5625 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் மதிப்பு 6512 கோடியாக உயர்ந்துள்ளது.

Advertisement