- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டில் இந்த மூணு பேர்ல ஒருத்தர் இரட்டை சதம் விளாசுவது உறுதி – யுவராஜ் சிங் கணிப்பு

ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பது ஒரு காலத்தில் இமாலய இலக்காக இருந்தது. அதனை முறியடித்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று நிரூபித்தவர் சச்சின் டெண்டுல்கர் .அதனைத் தொடர்ந்து ரோகித் சர்மா அபாரமாக ஆடி தற்போது வரை மூன்று இரட்டை சதங்களை விளாசியுள்ளார் .

அதேபோல் டி20 கிரிக்கெட்டில் வல்லவராகத் திகழ்ந்தவர் யுவராஜ் சிங் 2007 உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டியவர். மேலும் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனையும் வைத்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் போன்று டி20 கிரிக்கெட்டில் இரட்டைசதம் விளாச முடியுமென யுவராஜ் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறியதாவது : டி20 கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிப்பது கடினம். அது அவ்வளவு சுலபம் அல்ல. ஆனால் இப்போது கிரிக்கெட் போய்க்கொண்டிருப்பதை பார்த்தால் அதுவும் சாத்தியமே. ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இரட்டை சதங்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல டி20 கிரிக்கெட்டிலும் இரட்டை சதங்கள் விளாசிப்படும்.

கிறிஸ் கெய்ல், டிவில்லியர்ஸ், ரோஹித் சர்மா ஆகிய மூவரில் ஒருவர் கண்டிப்பாக இரட்டை சதங்கள் விளாசுவர் என்று கூறியுள்ளார் யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரில் 200 கிட்டத்தட்ட 175 ரன்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by