
2026-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. ஆனாலும் தனிப்பட்ட முறையில் சூரியகுமார் யாதவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதனால் அவரது பார்ம் மற்றும் இந்திய அணியின் எதிர்காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியிலிருந்து சூரியகுமார் யாதவ் நீக்கப்பட்டார்.
அதன் காரணமாக புதிய கேப்டனுக்கான தேவையும் இந்திய டி20 அணிக்கு ஏற்பட்டது. அவ்வேளையில் ஐ.பி.எல் போட்டிகளின் போது மிகச் சிறப்பான கேப்டன்சி செய்து அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் டி20 போட்டிகளுக்கான வாய்ப்பு கிடைத்ததோடு மட்டுமின்றி கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரது தலைமையில் இந்திய டி20 அணி எவ்வாறு செயல்படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்தது. ஆனால் தற்போது முதல் நான்கு போட்டிகளில் கேப்டன்சி செய்துள்ள அவர் ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.
அப்படி ஷ்ரேயாஸ் ஐயர் சந்தித்த நிலை யாதெனில் : அயர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் அந்த இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தார். அதன் காரணமாக இந்திய அணி டி20 தொடரை நீண்ட இடைவெளிக்கு பின்னர் இழந்தது.
இதையும் படிங்க : எல்லாம் சரியா போன நேரத்துல மேட்ச் மாறனதே இந்த இடத்தில் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் வருத்தம்
அதன்பிறகு தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட வேளையில் இரண்டாவது போட்டியிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதனால் முதல் நான்கு போட்டிகளில் மூன்று தொடர் தோல்விகளை ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக சந்தித்துள்ளார். இவருக்கு முன்னதாக எந்த ஒரு இந்திய கேப்டனும் இந்த நிலையை சந்தித்தது கிடையாது.