
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நேற்று மான்செஸ்டர் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்து ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தாலும் இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அக்சர் பட்டேல் நான்கு ஓவர்களை வீசி 20 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
அப்படி அவர் எடுத்த இந்த ஒரு விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அப்படி நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக கடந்த 2015-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 98 போட்டியில் விளையாடி 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க : 3 ஆவது இந்திய பந்துவீச்சாளராக டி20 போட்டிகளில் மோசமான சாதனையை நிகழ்த்திய – ரவி பிஷ்னாய்
நேற்று அவர் எடுத்த ஒரு விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை பூர்த்தி செய்த அவர் முதல் இந்திய சுழற்பந்து வீச்சாளராகவும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவருக்கு முன்னதாக அர்ஷ்தீப் சிங், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் 100+ விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.