
மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது :
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்களை குவித்தது. பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 19 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் சார்பாக விளையாடிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவி பிஷ்னாய் டி20 போட்டிகளில் மோசமான சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் :
இந்த இரண்டாவது டி20 போட்டியின் 17-வது ஓவரை வீசிய ரவி பிஷ்னாய் அந்த ஓவரில் மட்டும் 29 ரன்களை விட்டுக் கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த மூன்றாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை நிகழ்த்தினார்.
இதையும் படிங்க : இந்திய டி20 அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நிகழ்த்திய மோசமான சாதனை – விவரம் இதோ
இதற்கு முன்னதாக துவம் துபே நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 34 ரன்கள் விட்டுக்கொடுத்து முதலிடத்திலும், ஸ்டூவர்ட் பின்னி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிராக 32 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இவ்வேளையில் ரவி பிஷ்னாய் இந்த பட்டியலில் 29 ரன்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.