எல்லாருக்கும் ரிட்டயர்டு ஆகும்போது தான் அந்த மரியாதை கிடைக்கும். ஆனா கோலிக்கு ? – மனம்திறந்த யுவ்ராஜ்

Yuvi
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் மிகத் திறமை வாய்ந்த ஆல்-ரவுண்டராக பல ஆண்டுகள் விளையாடி வந்த இவர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்த தனது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார். அந்த வகையில் தற்போது தனியார் பத்திரிக்கை நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

yuvi

- Advertisement -

அதில் அவர் இந்திய அணியின் கேப்டன் கோலி குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி அணியில் இணையும் போதே நம்பிக்கைக்குரிய வீரராக திகழ்ந்தார். அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியதால் வெகுவிரைவில் 2011ஆம் ஆண்டிற்கான உலக கோப்பை அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.

அந்த சமயத்தில் ரோஹித் மற்றும் கோலிக்கு தான் போட்டி இருந்தது ஆனாலும் கோலி அப்போது ரன்களை குவித்து கொண்டே இருந்ததால் உலக கோப்பை அணியில் விளையாடி அவரது கிரிக்கெட் வாழ்க்கையே மாறியது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கோலி எப்போதும் ஒழுக்கமாக பயிற்சியை மேற்கொள்ள கூடியவர்.

yuvi 1

மிக கடினமாக உழைத்தால் தான் சிறந்த பேட்ஸ்மேனாக வரமுடியும் என்பதை நினைத்து கடினமாக பயிற்சி எடுப்பார் அதை நானே கண்கூடாக பார்த்திருக்கிறேன். மேலும் தனது கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்காக தன்னைத்தானே அவர் வடிவமைத்துக் கொண்டார். எல்லோரும் சொல்வதுபோல அவரது கேப்டன் பொறுப்பு அவரது பேட்டிங்கை பாதிக்கவில்லை. மாறாக தற்போது அவர் நிறைய ரன்களை குவித்து வருகிறார் என்று யுவ்ராஜ் சிங் புகழ்ந்துள்ளார்.

Kohli 1

அதுமட்டுமின்றி எல்லாருக்கும் பொதுவாகவே ஓய்வு பெறும் போதுதான் லெஜன்ட் அந்தஸ்து கிடைக்கும். ஆனால் கோலி 30 வயதிலேயே அந்த அந்தஸ்தை எட்டி விட்டார். ஏனெனில் 30 வயதில் முடியும் முன்னரே அவர் கிரிக்கெட் உலகில் ஏகப்பட்ட சாதனைகளை செய்து விட்டார். இன்னும் அவர் ஓய்வு பெறும்போது கிரிக்கெட்டின் உச்சத்தில் இருப்பார் என்றும் அதனை காண ஆவலாக இருப்பதாகவும் யுவராஜ் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement