என்னுடைய கிரிக்கெட் வாழ்வில் நான் விளையாட சிரமப்பட்ட பவுலர் இவர்தான் – யுவ்ராஜ் ஓபன் டாக்

yuvisix
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் இந்திய அணிக்காக பல ஆண்டுகள் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். தான் விளையாடிய காலத்தில் பல்வேறு சீனர் வீரர்களுடன் விளையாடிய யுவராஜ்சிங் அப்போதும் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்தார்.

yuvi

- Advertisement -

கடந்த 2011-ம் ஆண்டுக்கு பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் அணியில் இணைந்த யுவராஜ் தொடர்ச்சியாக அணியில் நீடிக்கவில்லை. அவ்வப்போது அணிக்கு உள்ளேயும் வெளியேயும் செல்வதுமாக ஆக இருந்த அவர் இறுதியாக சென்ற ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார்.

இந்நிலையில் ஓய்விற்கு பிறகு கிரிக்கெட் குறித்த பல தகவல்களை அவர் ரசிகர்களுக்காக தொடர்ந்து வழங்கி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஸ்டார்ஸ்போர்ட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும்போது : நான் ஐபிஎல் இல்லாதபோது 2000 ஆவது ஆண்டில் இந்திய அணிக்கு வந்தேன். எனக்கு பிடித்த வீரர்களை தொலைக்காட்சியில் பார்த்து வளர்ந்து ஒருநாள் அவர்களுக்கு அருகிலேயே ஒரு வீரராக அமர்ந்தேன்.’

Yuvi

அவர்களிடம் இருந்து ஏகப்பட்ட விடயங்களை கற்றுக் கொண்டேன். அவர்கள் மீது எப்போதும் எனக்கு தனி மரியாதை உண்டு. தற்போது உள்ள இந்திய அணியில் மூத்த வீரர்கள் யாரும் இல்லை அனைவரும் சம வயதுடையவர்களாகவே உள்ளனர். இன்று இளம் வீரர்களுக்கு பணமழை கொட்டும் ஒரு தொடராக ஐபிஎல் தொடர் விளங்கிவருகிறது. இந்திய அணிக்கு ஆடும் முன்னரே இளைஞர்கள் பலரும் ஐபிஎல் மூலம் பணம் சம்பாதிக்க தொடங்குகின்றனர்.

- Advertisement -

இதனால் நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் போட்டியை அவர்கள் விளையாடுவதில்லை. மேலும் அது குறித்த அணுகுமுறையும் அவர்களிடம் மோசமாகவே உள்ளது. ஐபிஎல் தொடரில் பண மழை பொழிவதால் இளைஞர்கள் கவனம் அதன் பக்கமே உள்ளது. நான் இப்போது உள்ள வீரர்களை கூறவில்லை. ஆனாலும் இளம் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றனர். இதனால் நான்கு நாட்கள் கிரிக்கெட் பாதிக்கப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.

yuvidhoni

அதன் பின்னர் தான் விளையாடிய காலத்தில் சவாலான பந்துவீச்சாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த யுவ்ராஜ் கூறுகையில் : இலங்கை அணியின் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்துவீச்சை எப்போது நான் எதிர்கொண்டாலும் அது எனக்கு சவாலாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் பந்து வீச்சை எதிர்கொள்வது சிரமம் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement