அதிரடி காட்டி அசுர சிக்ஸ் அடித்த யுவராஜ். திகைத்து போய் பார்த்த பவுலர் – வைரல் வீடியோ

Yuvraj
Advertisement

குளோபல் டி20 கிரிக்கெட் தொடர் கனடாவில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் டொராண்டோ இன்டர்நேஷனல் அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

yuvraj 3

நேற்று நடந்த போட்டியில் யுவராஜ் ஒரு அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான அணியும் மோதின. மழை காரணமாக இந்த போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் ஆடிய டு பிளிஸ்சிஸ் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் அடித்தது.

- Advertisement -

அதன் பிறகு 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் யுவராஜ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் யுவராஜ் அணி சிறப்பாக விளையாடி 192 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கடந்த போட்டியில் தடுமாறி யுவராஜ் இந்த போட்டியில் 21 பந்தில் 3 பவுண்டரி 3 சிக்சர்கள் என 35 ரன்கள் எடுத்தார்.

அதிலும் குறிப்பாக யுவராஜ் அடித்த சிக்ஸ் ஒன்று பிளாட்டாக சென்றது. இதைக் கண்ட பவுலர் திகைத்து நின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது குறிப்பிடத்தக்கது

Advertisement