டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் : இந்திய அணி ஜெயிக்கனுனா இந்த ஒரு விஷயத்துல கவனமா இருக்கனும் – யுவ்ராஜ் சிங்

Yuvi

ஐசிசி முதன்முறையாக நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டியில் விளையாட புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தேர்வாகியுள்ளன. அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் வருகிற 18-ஆம் தேதி சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள மைதானத்தில் இந்த இறுதிப் போட்டியில் மோத இருக்கின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்று எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

INDvsNZ

இந்நிலையில் இந்த போட்டி குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி நிச்சயம் 3 போட்டிகள் கொண்ட ஆட்டமாக இருந்திருக்க வேண்டும்.

- Advertisement -

ஏனெனில் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தாலும் மீதமுள்ள இரண்டு டெஸ்டில் மீண்டு வந்து வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அமைந்து இருக்கும். மேலும் நியூசிலாந்து அணி ஏற்கனவே தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருவதால் அவர்களுக்கு இறுதிப்போட்டி சற்று சாதகமாக அமையும் வாய்ப்பு உள்ளது. பேட்டிங்கை கணக்கிடுகையில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணி சற்று பலம் வாய்ந்ததாக எனக்கு தெரிகிறது. ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதல் முறையாக இங்கிலாந்து மண்ணில் துவக்க வீரர்களாக விளையாட உள்ளதால் அவர்கள் சற்று மைதானத்தை கணித்து விளையாட வேண்டியது அவசியம்.

gill 2

ஏனெனில் டியூக்ஸ் பந்தில் நல்ல ஸ்விங் இருக்கும். மேலும் இங்கிலாந்து ஆடுகளங்களில் வேகம் மற்றும் ஸ்விங் ஆகியவற்றிற்கு கைகொடுக்கும் என்பதால் பேட்ஸ்மேன்கள் நிதானித்து ஆட வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் உள்ள காலநிலைக்கு ஏற்ற மாதிரி நாம் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டி நடக்கும்போது ஒவ்வொரு பகுதியிலும் நாம் கவனத்தை வைத்திருக்க வேண்டும். அதாவது காலையில் பந்து நன்றாக ஸ்விங்காகும் அதனால் சற்று நிதானமாக பந்துகளை எதிர்கொண்டு விளையாட வேண்டும்.

- Advertisement -

IND

அதே போன்று மதியத்தில் எந்தவித இடையூறும் இருக்காது. அதன் காரணமாக மதியத்தில் ரன்களை வேகமாக எடுக்க முயற்சிக்க வேண்டும் மேலும் தேநீர் இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பந்து ஸ்விங் ஆகும் எனவே ஒரு நாளில் இருக்கும் அந்த மூன்று பகுதிகளிலும் நாம் சரியான திட்டமிடலுடன் கவனித்து சூழ்நிலைக்கு ஏற்றார் போல் விளையாடினால் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது என யுவராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement