ஓய்வு கொடுத்தாச்சி அடுத்து கிரிக்கெட் வர்ணனனை செய்யபோகிறாரா ? யுவராஜ் சிங் – அவரே கூறிய தகவல் இதோ

Yuvraj-Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் ஆல் ரவுண்டர் யுவராஜ் வர்ணனையாளராக மாறப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட ஆசைப்பட்டாலும் தொடர் புறக்கணிப்பால் கடந்த ஆண்டு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்.

Yuvi 2

- Advertisement -

கடந்த 2007 மற்றும் 2011ம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வெல்வதற்கு இவர் பெரும் காரணமாக இருந்தார். இந்நிலையில் ஓய்வு பெற்ற பிறகு தற்போது தன்னுடைய பல வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படி இருக்க சமீபத்தில் இவர் தனது நண்பர்களுடன் சமூகவலைதளத்தில் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில் :

தனக்கு முழுநேர வர்ணனையாளராக ஆசை இல்லை என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : வர்ணனையாளர்கள் பேசுவது சிலவற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . அதனால் நான் முழுநேர வர்ணனையாளராக இருக்க விரும்பவில்லை. ஐசிசி தொடர்களில் மட்டுமே வர்ணனையாளராக விருப்பம் உள்ளது.

yuvi

ஏனெனில் வர்ணனையாளராக வேலை செய்கையில் ஒரு நேரத்தில் ஆட்டத்தை விமர்சித்து பேசவேண்டியிருக்கும் ஆனால் களத்தில் உள்ள வீரர்களின் நெருக்கடி எனக்கு தெரியும் . மேலும் நான் இளம் வீரர்களை விமர்சிக்க விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் இன்னும் வர்ணனையாளர் ஆகவில்லை.

- Advertisement -

இளம் வீரர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு நேரம் கொடுக்கவேண்டும். அதனால் வர்ணனையாளராக உள்ளவர்கள் சமநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஏற்கனவே தற்போது உள்ள வர்ணனையாளர்கள் விமர்சையான கருத்துக்களால் அவ்வப்போது சிக்கலில் சிக்கி வருகின்றனர்.

Yuvi

இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் இல்லை என்றாலும், ஐ.சி.சி தொடர்களில் வர்ணனை செய்யும் யோசனை இருப்பதாக யுவராஜ் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கிரிக்கெட்டில் தனது பேட்டிங் மூலம் அதிரடி காண்பித்த யுவராஜ் அடுத்து தனது பேச்சால் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்வாரா ? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

Advertisement