ப்ளீஸ் ஹெல்மட் மட்டும் போட்டுக்கோங்க. நீங்க ரொம்ப டேலன்ட்டான பிளேயர் – யுவராஜ் கொடுத்த அறிவுரை

Sheldon
- Advertisement -

நடப்பு பதினைந்தாவது ஐபிஎல் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலாவதாக விளையாடிய சென்னை அணியானது கொல்கத்தா அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 131 ரன்களை மட்டுமே குவித்தது.

அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 18.3 ஓவர்களில் 133 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த விக்கெட் கீப்பரான செல்டன் ஜாக்சனின் செயல்பாடு பலரது பாராட்டையும் பெற்றது. ஏனெனில் 35 வயதான அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் ஏகப்பட்ட அனுபவத்தை கொண்டவர்.

- Advertisement -

அதுமட்டுமின்றி வாய்ப்புக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த அவருக்கு தற்போது கொல்கத்தா அணி மூலம் பொன்னான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த அந்த வாய்ப்பை அவர் நேற்று சிறப்பாக பயன்படுத்தினார் என்று கூறலாம். குறிப்பாக நேற்று இப்போட்டியின் முக்கியமான நேரத்தில் உத்தப்பாவை அவர் அருமையாக ஸ்டம்பிங் செய்திருந்தது போட்டியின் திருப்புமுனையாக அமைந்ததால் பலரது பாராட்டையும் பெற்று இருந்தது.

குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் கூட அவரைப் புகழ்ந்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செல்டன் ஜாக்சன் செயல்பாடு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவ்ராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு சிறிய அறிவுரை ஒன்றினை வழங்கியுள்ளார்.

- Advertisement -

அதன்படி யுவராஜ் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் : டியர் ஷெல்டன் ஜாக்சன் நீங்கள் கட்டாயம் தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். ஸ்பின்னருக்கு எதிராக கீப்பிங் செய்யும்போது ஹெல்மெட் போடாமல் இருக்க கூடாது. நீங்கள் ஒரு திறமையான வீரர். உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பொன்னான வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்துள்ளது. எனவே பாதுகாப்பாக இருங்கள். ஆல் தி பெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : 2016ல எப்படி இருந்தாரோ அந்த கோலியை பாக்கப்போறீங்க – எதிரணிகளை எச்சரிக்கும் முன்னாள் ஜாம்பவான்

யுவ்ராஜ் சிங்கின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் செல்டன் ஜாக்சனுக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement